| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

அறங்காவலர் குழு முடிவின்படி உச்சப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது....!!"

by admin on | 2026-11-24 08:36 PM

Share:


அறங்காவலர் குழு முடிவின்படி உச்சப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது....!!"

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம்.

Website: www.thiruparankundrammurugan.hice.tn.gov.in

Email: domreomdu 31985.hrce@tn.gov.in

E.Code MDMDU002, ITMS CODE: 31985

+91-0452-2482248,+91-0452-2482249

*திருபரங்குன்றம் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, இன்று பிற்பகல் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மூலவர் சன்னதிக்கு நேர் மேலே, உச்சப் பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.*

செய்தி குறிப்பு


திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச்சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள். பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய நீண்ட சமய மரபுகள் காலத்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices) மற்றும் சடங்குகள் (Custom and Rituals), ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை திருக்கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

எனவே, நமது திருக்கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இத்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேற்கண்ட அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி, இத்திருக்கோயில் திருக்கார்த்திகை மகாதீபமானது, இத்திருக்கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள 24.11.2026 06.00 உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று மணியளவில் ஏற்றப்பட்டது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

செய்திகள துணை ஆணையர்/செயல் அலுவலர்

அறங்காவலர்கள்

சி.ராஜபாண்டியன். க.அழகப்பன்,கே.ரெஜினாதேவி.க.சித்ரா

1/24/9/20 துணை ஆணையர் செயல்அலுவலர் துனைஇணையச் செயர் உம அலுமணை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம், மதுரை - 625 006

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment