by satheesh on | 2026-11-24 05:28 PM
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு முடித்துவைப்பு ;
கோயிலில் வழிபாடு நடத்துவதை நாங்கள் தடை செய்யவில்லை; மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் மட்டுமே 258 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் - அரசுத் தரப்பு. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று மலை உச்சித் தூணில் விளக்கு ஏற்றப்பட வேண்டும். அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என பக்தர்கள் அச்சம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்பதற்காக சீராய்வு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக பல உத்தரவுகளில் கூறியுள்ளது - நீதிபதிகள்.. நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகளை வேறு எந்த அதிகாரியிடம் இருந்து வழங்கப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அவற்றை புறக்கணிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை காரணமாகக் கூறி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. சம்மந்தப்பட்ட அதிகரிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள் - நீதிபதிகள். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு முடித்துவைப்பு.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு ! நீதிமன்றம் அறிவுறுத்தல் - முடித்து வைப்பு !!
சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியீடு...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்கள்...!!"
கடனை அடைக்கவும், மீனாட்சிக்கு உதவவும் - கொள்ளை நடத்தியதாக நிஷாந்த் பரபரப்பு வாக்குமூலம்! ப்ளீஸ் மீனாட்சி விட்டுடுங்க - புலம்பும் நிஷாந்த் !!
சிறப்பு புலனாய்வு மற்றும் குற்ற நுண்ணறிவு குழு அமைப்பு....!!!
சட்டவிரோதமாக அணையில் நீரை திறந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை …..!!"