by admin on | 2025-02-06 12:52 PM
மருத்துவம் இல்லாத மயிலாடுதுறையில் என் மகளை காத்த மகத்தான மருத்துவர்...
எனது மகள் கயல்விழிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு கை கால் முட்டி நாக்கு வாய் முழுவதும் பெரிய பெரிய கட்டிகள் உருவாகி உடலுக்குள் நெருப்பாய் எரிய ஆரம்பித்துவிட்டது .....மூன்று நாட்களாக கத்தி கதறி 48 மணி நேரம் அழுது கொண்டே இருந்தார் ...
மயிலாடுதுறையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அத்தனை மருத்துவமனைகளையும் தூக்கிக் கொண்டு ஏறி இறங்கினேன் எந்த மருத்துவமனையிலும் எந்த மருத்துவராலும் இது என்னவென்று சொல்ல முடியவில்லை ...
ஒரு மருத்துவமனையில் அம்மை என்றனர் ..
இன்னொரு மருத்துவமனையில் சத்து குறைபாடு என்றனர்....
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரு பக்கம் மூளைக்காய்ச்சல் என்று ஒருவர் சொல்கிறார் ...
அடுத்த மருத்துவர் வந்து தோல் நோயாக இருக்கலாம் என்று சொன்னார்கள் மேலும் இவர்கள் கொடுத்த மருந்துகளால் மேலும் மேலும் எரிச்சல் அதிகமாகி கத்தி கதறினார் ....மிகவும் சீரியஸாக இருக்கிறார்,திருவாரூர் மருத்துவ கல்லூரி அல்லது சிதம்பர மருத்துவ கல்லூரியில் கொண்டு சேருங்கள் என என்னை மாற்றி அனுப்பி வைத்தனர் ...
என் மகளை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனை வாசலில் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த போது எனது மைத்துனர் ஆலோசனை அடிப்படையில் *மயிலாடுதுறையில் செங்கமேட்டு தெருவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை LITTLE KRISHNA* வில் மருத்துவமனைக்கு போய்விட்டுஅதன் பிறகு வெளியில் செல்லலாம் என்றார் .துடிக்க துடிக்க தூக்கி கொண்டு சென்றோம்...
ரத்த டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டு மருத்துவர் மரியாதைக்குரிய பாலாஜி அவர்கள் தன் சொந்த குழந்தை போல எனது மகளை கனிவோடு கவனித்து என் மகளுக்கு உண்மையிலேயே என்ன பிரச்சனை என்று கண்டறிந்து எங்களிடம் சொன்னார். வைரஸ் அட்டாக் தான் தீவிராக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய முடியும் என்றார்.சாதாரணமாக பிள்ளைகளுக்கு ஐந்து இருந்தால் இருக்கும் ஆனால் உங்கள் மகனுக்கு 15 லிருந்து 20% அட்டாக் இருக்கிறது
இப்படியே போனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்று சொல்லிவிட்டு அவருடைய மருத்துவ சேவையை தொடங்கினர்
மூன்று நாட்களாக அழுது புரண்ட எனது மகள் மூன்று மணி நேரத்தில் அவரின் சிகிச்சைக்குப் பிறகு அமைதியாக உறங்கினார் ..உண்மையில் நேற்று அவர் தான் எனக்கு கடவுளாக தெரிந்தார்....
பெற்ற மகள் மூன்று அப்பா என்னை எப்படியாவது அதை காப்பாற்று எப்படியாவது காப்பாற்று என்று கதறி அழுத அந்த ஒவ்வொரு நிமிடமும் நரகம் நரக வேதனை அடைந்தோம்
நேற்று இருவரும் மருத்துவரிடம் இரு கை எடுத்து வணங்கி மருத்துவர் பாலாஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்தோம்!!!ஒரு கட்சியினுடைய மாவட்ட செயலாளராக பலருக்கு பல பிரச்சினைகளுக்கு ஓடிப்போய் மருத்துவமனையில் சேர்ப்பது அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்றெல்லாம் செய்திருக்கிறேன்! !!நேற்று நிலை தடுமாறி நின்றேன்...
மகத்தான மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி ஒரு தந்தையாக ....
சி.தமிழன் காளிதாசன் MA, B.Ed
மாவட்டச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை 9688715435