by satheesh on | 2026-03-04 10:58 PM
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை:
மலை உச்சியில் பூஜை செய்ய நீதிமன்றம் கூறும் 5 பேரை அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய விசாரணை உத்தரவு குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு பதில் புதிய வழிபாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அறங்காவலர்கள் ஆலோசனைதான் கூற முடியும்; முடிவு எடுக்க முடியாது என கோயில் தரப்பில் வாதம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேட்டுச் சொல்லுங்கள்? நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து எத்தனை மாதம் ஆனது? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி. உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் கார்த்திகை தீபம் ஏற்றுவதாக கோயில் பட்டர்கள் தெரிவிக்கின்றனர் - கோயில் தரப்பு வாதம். மலை மீது பூஜை செய்வது தொடர்பாக உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. 2 வார கால அவகாசம் அளியுங்கள், ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம் - கோயில் தரப்பு அப்படி என்றால், அறங்காவலர் குழுவினரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கவா? - நீதிபதி கேள்வி இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே, விசாரணைக்கு உகந்தது அல்ல; இதில் கூடுதலாக யாரையும் சேர்க்க இயலாது - காவல்துறை தரப்பு வழக்கறிஞர். நான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றச் சொல்லவில்லை அதன் முதல் படியாக, 5 நபர்கள் மலை உச்சிக்கு சென்று அந்தத் தூணுக்கு வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க முடியுமா? முடியாதா? என்பதுதான் எனது கேள்வி - நீதிபதி. இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும்? என்பது குறித்து ஆலோசிக்க 2 வார கால அவகாசம் கொடுங்கள்; ஆலோசித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றோம்”-மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம். உத்தரவை நிறைவேற்றுவதில் எனது தனிப்பட்ட உத்தரவாகப் பார்க்க வேண்டாம்; நீதிமன்ற உத்தரவாக நிறைவேற்றுங்கள். தற்போது தீபம் ஏற்ற வேண்டாம்; குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் வழிபாடு செய்வதற்கு அனுமதி கொடுங்கள்- . நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..வழக்கு விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!