by admin on | 2026-11-25 08:19 PM
*கேள்வி-பதில்*
*-- ஆர். வி. ஆர்*
[முந்தைய கேள்வி-பதில் பகுதிகளை இங்கு தட்டிப் படிக்கலாம் --> https://rvr-india.blogspot.com]
*1. கேள்வி:* மத நல்லிணக்கம் என்றால் என்ன?
*பதில்:* தமிழகத்தில் அதற்கு அர்த்தம் இது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள், எப்போதுமே ஹிந்துக்கள். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்படாதவாறு ஹிந்துக்கள் நடந்து கொண்டு, அதற்கான அத்தாட்சியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் ஜோசப் விஜய்யிடம் பெற்றுவிட்டால், ஹிந்துக்கள் மத நல்லிணக்கம் கொண்டவர்கள் என்று பொருள்.
****
*2. கேள்வி:* "தவெக ஆட்சி அமைந்ததும், நமக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மாமூல் வராததால் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட என்னால் சொல்ல முடியும். ஆனால் அதை சொல்ல நான் விரும்பவில்லை. அது ஒரு போதும் நடக்காது" என்று மதிமுக தலைவர் வைகோ ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறாரே?
*பதில்:* வைகோ ஆதரித்த முந்தைய ஸ்டாலின் ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் அரங்கேறியது என்றும், அதைப்பற்றி அவர் அப்போது பேசுவது 'அயோக்கியத்தனம்' என்பதால் அன்றைய தினம் அதைப் பற்றிப் பேசாமல் இருந்ததாகவும் விஜய் கூட்டணியில் இணைந்த பின் வைகோ தெரிவித்தார்.
பல மட்டத்தில் லஞ்ச ஊழல் நடந்த ஒரு ஆட்சியை ஆதரித்த வைகோ, அந்த ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்றபோது, அதன் லஞ்ச ஊழலை அப்போது கண்டித்ததில்லை; ஆனால் தனி மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஆதரவில் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது - அதன் காரணமாக அந்த ஆட்சி கவிழ ஒரு வாய்ப்பிருக்கிறது - என்றால், அந்த ஆட்சியின் கீழ் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் லஞ்ச ஊழல் செய்ய முடியவில்லை, அந்த அதிகாரிகள் விஜய் ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள் என்று வைகோ பேசுவாரா? வைகோ ஐஸ் கட்டியாக இருப்பதுதான் விஜய்க்கான கேடயமா?
இன்னொன்று: ஆளும் கட்சி பக்கத்தில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஏதோ காரணத்திற்காக அணி மாறுவதால் அந்த ஆட்சி கவிழுமா, அல்லது லஞ்சம் வாங்க முடியாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் ஒரு ஆட்சி கவிழுமா? என்ன சொல்கிறார் வைகோ *****
*3. கேள்வி:* கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ தகாத வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதை அந்த எம்.எல்.ஏ-வும் அவர் கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். இது பற்றி ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுப்போட, நீதிபதியும் கலெக்டரிடம் விவரம் கேட்டுத் தகவல் தெரிவிக்குமாறு அரசிடம் தெரிவித்தார். உடனே கலெக்டரிடம் போலீஸ் எழுத்து பூர்வமாகப் புகார் பெற்று, சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குப் பின் தற்போது எப்.ஐ.ஆர் பதிவாகி இருக்கிறதே?
*பதில்:* வழக்கு நடந்து குற்றவியல் நீதிமன்றத்தில் என்ன நிலைநாட்டப் படுகிறது என்று பார்க்கலாம். அது சட்டத்தின் பக்கம்.
இன்னொரு பக்கம்: ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது, ஆதாரம் இல்லாமல் ஒரு கலெக்டர் இப்படியொரு குற்றச்சாட்டை பொய்யாகச் சொல்லியிருப்பார், அதுபற்றி இப்போது எழுத்து மூலமாகப் புகாரும் அளித்திருப்பார் என்று நினைக்க முடியவில்லை. தனது கட்சி எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை முதலிலேயே மறுத்துப் பின்னர் தர்மசங்கடத்தில் சிக்க வேண்டாம் என்றுதான் முதலமைச்சர் விஜய் இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே மௌனமாக இருக்கிறார்.
விஷயம், ஒரு மனிதரின் நடத்தை தொடர்பான ஒழுங்கீனம் குறித்தது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவது என்பதும் ஒரு வகையான ஒழுங்கீனம் தான். முதலாவதிலிருந்து ஒரு சிறிய எட்டு வைத்தால் இரண்டாம் கட்டத்திற்கு வரலாம்.
முதலாம் விஷயத்தில், தனது கட்சி எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டு வெளியில் வர வேண்டாம், ஒரு கலெக்டருக்கு அலுவல் தொடர்பாக நேர்ந்த துயரம் பற்றிய குற்றச்சாட்டு அப்படியே அமுங்கி அணைந்து போகட்டும், என்று முதல்வர் நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால், ஆட்சியில் லஞ்ச ஊழலைக் கட்டுக்குள் வைப்பது குறித்து அவர் எவ்வளவு நாட்கள் எந்த அளவுக்கு முனைப்பு காட்டுவார், அவர் கட்சிப் பிரதிநிதிகள் தான் லஞ்ச ஊழலைத் தவிர்க்க நினைப்பார்களா? போகப் போக பார்க்க வேண்டும்.
*4. கேள்வி:* கள்ளக்குறிச்சி கலெக்டருக்குத் தகாத வாட்ஸ்அப் மெசேஜ் வந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ-வைக் "கைது செய்யத் தேவையில்லை" என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கருத்து சொல்லியிருக்கிறாரே?
*பதில்:* காது நடவடிக்கை தேவையா இல்லையா என்பது இருக்கட்டும். தாம் எந்த விஷயத்தில் என்ன கருத்து தெரிவிக்கலாம், அது பொதுமக்கள் மத்தியில் தன்னைப்பற்றி என்ன தாக்கம் ஏற்படுத்தும், என்பதை அரசியல்வாதியான கார்த்தி சிதம்பரம் முதலில் அறிந்துகொள்வது அவசியம். *****
*5. கேள்வி:* அமைதியான ஹிந்து மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அலட்சியம் செய்வதில் மு.க. ஸ்டாலின், ஜோசப் விஜய், ஆகியோருக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
*பதில்:* வில்லன் நடிகர் நம்பியாரைப் போன்றவர் மு.க. ஸ்டாலின். அவர் கையில் கத்தியைச் சுழற்றியபடி முகத்தில் குரூரம் காண்பித்து தூரத்தில் வரும்போதே அவரை நாம் புரிந்து கொள்ளலாம்.
வில்லன் நடிகர் சத்யராஜைப் போன்றவர் ஜோசப் விஜய். அவர் சிரித்தபடி அருகில் வந்து தனது பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைக்கும்போது, கர்சீப்பை எடுக்கப் போகிறார் என்று நாம் நினைத்தால் அவர் சிறு துப்பாக்கியை எடுப்பார். நாம் சுதாரிப்பதற்குள், டப் டப் *****
பகுதி 159
25.11.2026
R. Veera Raghavan
Advocate, Chennai
Email: veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு துவக்க விழா....!!!
மத நல்லிணக்கம் என்றால் என்ன....?????? ஆர் வி ஆர் கேள்வி பதில்கள்....!!!"
குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு...!!!
பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க தவறிய தமிழக அரசு கண்டித்து வாய்மூடி நூதனப் போராட்டம்...!!!
திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது குறித்து மதுரை ஆட்சியரின் தில்லாலங்கடி பதில்...!!!!