by admin on | 2026-11-25 08:30 PM
தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு, தேனி மாவட்ட துவக்கவிழா, பெரியகுளம், செழும்பு ஸ்ரீமகாலட்சுமி சித்தர் பீடத்தில் , மாநிலத் துணைத் தலைவர் குருஜி மகாஸ்ரீராஜன் தலைமையில், மதுரை பெருங்கோட்டத் தலைவர், தேசிய நல்லாசிரியர் விஜயகுமார் முன்னிலையில், மாநில பொதுச்செயலாளர் தென்காசி கேப்டன், முனைவர் வேலம்மாள் சிறப்புரையாற்ற மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேனிமாவட்ட தலைவர் போடி பாலசுப்பிரமணி, பொதுச்செயலாளர் தேனி அரிமா சங்க சேர்மன் சீனிவாசன், பொருளாளர் பெரியகுளம் நேசம் முருகன், மகளிரணி தலைவி பெரியகுளம் கவுசல்யா, வழக்கறிஞர் அணி, ஞானசேகரன், சசிகலா, இளைஞர் அணி சங்கர், குமரேசன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர்கள், அர்ச்சகர் அணி மாரிச்சாமி, உழவாரப் பணி சேதுராமன் தேர்வு செய்யப்பட்டனர்.
தேனி மாவட்ட பகுதியில் ஆலயங்களின் உழவாரப்பணி, சேதமடைந்த கோவில்களை பராமரிப்பு செய்வது, மரபு சடங்கு, , பாரம்பரியம் காத்தல் சுத்தமான காற்று தரும் அரசு, வேம்பு, போன்ற மரங்களை கோவில் வளாகங்களில் நட்டு, பராமரித்து, வருவது டிசம்பர் 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆன்மீக எழுச்சி மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் ஆயிரம் ஆன்மீக தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு துவக்க விழா....!!!
மத நல்லிணக்கம் என்றால் என்ன....?????? ஆர் வி ஆர் கேள்வி பதில்கள்....!!!"
குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு...!!!
பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க தவறிய தமிழக அரசு கண்டித்து வாய்மூடி நூதனப் போராட்டம்...!!!
திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது குறித்து மதுரை ஆட்சியரின் தில்லாலங்கடி பதில்...!!!!