| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானல் மலையில் கோர விபத்து ! 3 பேர் பலி 19 பேருக்கு படுகாயம் !!

by satheesh on | 2026-11-20 09:16 AM

Share:


கொடைக்கானல் மலையில் கோர விபத்து ! 3 பேர் பலி 19 பேருக்கு படுகாயம் !!

கொடைக்கானல் மலைப்பாதையில் பயங்கர விபத்து - 400 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலி16 பேர் படுகாயங்களுடன் மீட்பு :


பழனி : கொடைக்கானல் மலைப்பாதையில் 400 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பள்ளத்தில் பாய்ந்த வேன் :திண்டுக்கல் மாவட்டம், பழனி மதினாநகர் பகுதியை சேர்ந்தவர் முஜிப் ரகுமான் (வயது 55), பூ வியாபாரி. இவரது உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முஜிப் ரகுமான் தனது உறவினர்களுடன் வேனில் கொடைக்கானல் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வேனில் பழனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் சவரிக்காடு அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த சுமார் 400 அடி பள்ளத்தில் பாய்ந்தது. 3 பேர் பலி-16 பேர் படுகாயம், இதில் வேனில் பயணம் செய்த 19 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என அபய குரல் எழுப்பினர். இதைக்கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீசார் மற்றும் கொடைக்கானல், பழனியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இதில் அங்கு வேனின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பழனி மதினா நகரை சேர்ந்த நிஜாமுதீன் (வயது 60), பழனியை சேர்ந்த சேக்பரீத் (27), அப்பாஸ் (65) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த முஜிப் ரகுமான், அவரது உறவினர்கள் அனீஸ் பாத்திமா (23), அம்ஜித்கான் (29), அசாருதீன் (28), சகிலா (45), யூசுப் (13), சபீனா (42) மற்றும் உடுமலையை சேர்ந்த சாஜித்மீரான் (25) உள்ளிட்ட 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள் கலக்கம், இதில் அனீஸ் பாத்திமா மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முஜிப் ரகுமானின்...  உறவினர்கள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பழனி ஆர்.டி.ஓ. பிரியங்கா, தாசில்தார் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த விபத்து கொடைக்கானல் மலைப்பாதையில் நடந்த இந்த பயங்கர விபத்து கொடைக்கானல் மற்றும் பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்த, கொடைக்கானல் போலீசார், கொடைக்கானல் பழனி தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார். 

 

இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment