| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

எது உந்து சக்தி....??? ஆர் வி ஆர் பதில்கள்....!!!!

by admin on | 2026-11-20 12:37 PM

Share:


எது உந்து சக்தி....???   ஆர் வி ஆர் பதில்கள்....!!!!

*கேள்வி-பதில்*


*-- ஆர். வி. ஆர்*



[முந்தைய கேள்வி-பதில் பகுதிகளை இங்கு தட்டிப் படிக்கலாம் --> https://rvr-india.blogspot.com]



*1. கேள்வி:* ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தேர்தலில் வென்று முதலமைச்சர் பதவியில் அமர்வதற்கு முன், அந்தப் பதவியில் அமர்ந்த பின், அடுத்த தேர்தலில் தோற்று அந்தப் பதவியை இழந்த பின் - இந்த மூன்று நிலைகளில் அவருக்கு எது உந்துசக்தி?


*பதில்:* பதவிக்கு வரும் முன், ஆசை; பதவிக்கு வந்த பின், சப்புக் கொட்டும் ஆசை; பதவியை இழந்த பின், காழ்ப்பு.


                             *****


*2. கேள்வி:* திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது பாடல் பாடியவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவர் புஷ்பவனம் குப்புசாமி. அவரது பாடலில், "நம் தமிழக முதல்வர் போல வேலெடுத்து பகை முடித்த வேலவனின் தாழ் பணிந்து வேண்டும் வரம் கேளுங்களேன்; வெற்றி உண்டு பாருங்களேன்; நம் தமிழக முதல்வர்போல வேண்டும் வரம் கேளுங்களேன்" என்ற வரிகளும் இருந்தன. அதற்குக் கண்டனங்கள் வரவே, "முருகனை வேண்டினால், வேண்டிய வரம் கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக, முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டேன்" என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் புஷ்பவனம் குப்புசாமி. அவர் விளக்கம் சரியா?


*பதில்:* "நான் தேடிப் போகாவிட்டாலும், இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவி எனக்குக் கிடைத்த மாதிரி, நீங்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் உரிய பதவியும் புகழும் உங்களுக்குக் கிடைக்க முருகன் அருள் புரிவான். அவை கிடைத்த பின்னர் உங்களுக்குப் பதவி கொடுத்தவருக்கு நீங்கள்  ஜால்ரா தட்ட வேண்டாம். முருகனைத் தொழுதால் போதும்" என்ற பொருளில் புஷ்பவனம் குப்புசாமி பாடியிருந்தால் நல்லது.


                             *****


*3. கேள்வி:* காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விடாமல் பிரதமர் மோடியை 'நேருக்கு நேர்' பொது விவாதத்திற்கு அழைத்து வருகிறாரே, ஏன்?


*பதில்:* ராகுல் காந்தி என்ன முயன்றும் நரேந்திர மோடியை, பாஜக கூட்டணியை, மத்திய  அரசு அமைப்பதற்கான லோக் சபா தேர்தல்களில் ஜெயிக்க முடியாமல் இப்போது மோடியை அவர்  'ஒத்தைக்கு ஒத்தை' விவாதத்திற்கு அழைக்கிறார். 

மோடியை நோக்கி, 'வா வாத்யாரே மேடையாண்டே, நீ வராங்காட்டி நா உடமாட்டேன்' என்று மனோரமா ஸ்டைலில் ராகுல் பாடாத குறைதான்.


மோடியோடு உட்கார்ந்து விவாதம் என்ற பெயரில் ராகுல் என்ன பிதற்றினாலும், திருதிரு என்று எப்படி முழித்தாலும், ராகுல் மீதும் அதிக மீடியா வெளிச்சம் விழும். அதை அனுபவிக்க ராகுலுக்கு ஆசை. இதுதான் விஷயம்


ராகுல் காந்தி அவ்வப்போது அமெரிக்கா சென்று அங்கு பல ஊர்களில் மேடை ஏறி, பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பேட்டிகள் கொடுத்து, இந்தியாவை இளக்காரம் செய்து, மோடியைப் பழிக்கிறார். இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கு மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்யாமல் ராகுல் காந்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்று ஆற்று என்று ஆற்றுகிறார். சொந்த நாட்டில் அதே போல் ஆற்ற முடியாதா?


                             *****


*4. கேள்வி:* கோவையில் உள்ள 'பெரியார் அறிவுலக'த்தின் நூலகம், 'அகல் விளக்கு' பதிப்பகத்திடமிருந்து, ஏஐ வழியில் எழுதப்பட்ட சுமார் 1800 போலிப் புத்தகங்களைக் கொள்முதல் செய்துள்ளது. 'அகல் விளக்கு' எனும் பதிப்பகத்தின் வண்டவாளம் தெரியவில்லை, அது பதிப்பித்த குப்பைப் புத்தகங்கள் பற்றியும் தெரியவில்லை என்றால், அது என்ன அறிவுலகம்?


*பதில்:* பதிப்பகம் இப்படி நினைக்கலாம்: பெரியார் அகல் உலகம்.


                             *****


*5. கேள்வி:* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, Belonging - A Journey of Love என்று அவருடைய சுயசரிதைக்குப் பெயரிட்டிருக்கிறார். ராகுல் காந்தி தனது சுயசரிதையை எழுதினால் அதற்கு என்ன தலைப்பு கொடுப்பார்?


*பதில்:* Longing for PM's Chair. A Journey of Hate


                             *****

                              

பகுதி 156

17.11.2026


                                 --------


R. Veera Raghavan

Advocate, Chennai


Email: veera.rvr@gmail.com

Blog: https://rvr-india.blogspot.com

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment