| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!

by satheesh on | 2026-11-15 08:44 PM

Share:


புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!

ராஜபாளையத்தில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 127 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது!


ராஜபாளையம் மதுரை சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டிஎஸ்பி ரமேஷ்( பொறுப்பு) தலைமைலான போதை ஒழிப்பு தனிப்படை எஸ்ஐ முருகன் உள்ளிட்ட போலீசார் மதுரை சாலை எம்.பி.கே புதுப்பட்டி பகுதியில் மறைந்திருந்து ரகசியமாக கண்காணித்தபோது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக மனித உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து வடக்கு காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் போலீசாருடன் சென்று  காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(44) மற்றும் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற ஆறுமுகப்பெருமாள்(31) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா உள்ளிட்ட 127 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு கார். புல்லட் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment