| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். ….!!!

by admin on | 2026-11-12 12:19 PM

Share:


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். ….!!!


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (12.11.2026) 

வரைவு வாக்காளர் பட்டியல் 2027-ஐ மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப.,  அவர்கள்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.  

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணியின் கீழ், தேனி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தேனி மாவட்டத்தில் 12.11.2026 முதல் 11.12.2026 வரை நடைபெற உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணிகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 10,46,972 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் – தொகுதி வாரியான விவரங்கள்:

சட்டமன்றத் தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்

ஆண்டிபட்டி 1,26,150 1,31,956 30 2,58,136

பெரியகுளம் (தனி) 1,29,882 1,36,963 109 2,66,954

போடிநாயக்கனூர் 1,28,056 1,36,382 15 2,64,453

கம்பம் 1,24,190 1,33,217 22 2,57,429

மொத்தம் 5,08,278 5,38,518 176 10,46,972

12.11.2026 முதல் 11.12.2026 வரை நடைபெறும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கும் காலத்தில், 01.01.2027 அன்று 18 வயது பூர்த்தியடையும் தகுதியுடையவர்கள் புதிய வாக்காளர்களாகப் பெயர் சேர்க்க படிவம்-6 மூலமாக விண்ணப்பிக்கலாம். 

இறந்துபோனவர்களின் பெயர்கள் உள்ளிட்ட தகுந்த காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7 மூலமாகவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம், புகைப்படத் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் உள்ளிட்ட தேவைகளுக்குப் படிவம்-8 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 21.11.2026, 22.11.2026 மற்றும் 29.11.2026 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது 28.12.2026-க்குள் தீர்வு காணப்பட்டு, 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தகுதியுடைய அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.தவலேந்து, இ.ஆ.ப.,  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகைதீன் இப்ராஹிம்,   மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.நல்லையா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (பொது) திரு.இராமகிருஷ்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment