| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போதையில் வெறிச் செயல்....!!!": போலீசாரும் மனிதர்கள் தானே.....!!!

by admin on | 2026-11-08 11:16 AM

Share:


போதையில் வெறிச் செயல்....!!!": போலீசாரும் மனிதர்கள் தானே.....!!!

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அதிர்ச்சி! - தீபாவளியைக் கொண்டாடச் சென்ற இடத்தில் போதையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறிச்செயல்; பூ வியாபாரி மீது கத்தி மற்றும் ஆயுதங்களுடன் கும்பல் தாக்குதல்*

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் வேளையில், தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் பொதுமக்களை கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. கஞ்சா மற்றும் மதுப் போதையில் வந்த மர்ம கும்பல் ஒன்று, பூக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது நடத்திய தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல சந்துரு பூக்கடையில் வழக்கம் போல் விவசாயிகள் சிவா மற்றும் விஜயகுமார் ஆகியோர் தங்களது தோட்டத்தில் விளைந்த பூக்களை விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனர்.


​இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கஞ்சா மற்றும் மதுப் போதையில் அங்கு வந்த சில வாலிபர்கள், பூக்கடையில் நின்றவர்கள் மீது பட்டாசுகளை வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இங்கு ஆட்கள் மீது பட்டாசு போடாதீர்கள் வேறு எங்குமாவது சென்று வெடியுங்கள் என்று கண்டித்துள்ளனர்.  

​இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், உடனடியாகத் தனது செல்போன் மூலம் தன் கூட்டாளிகளைத் தொடர்பு கொண்டு கூடுதல் ஆட்களை வரவழைத்துள்ளார். 

சிறிது நேரத்தில் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பூக்கடையில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

​இந்தக் கொடூரத் தாக்குதலில் விவசாயி சிவா தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் படுகாயமடைந்த சிவாவை மீட்டு அவசர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

​பட்டப் பகலில்  அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நாளில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய காவல் துறையின் கண்மூடித்தனமான இந்தச் செயலும், நகரில் அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரமும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


​சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தலைமறைவாகிவிட்ட அந்த மிரட்டல் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி நகரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, காவல் துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


T. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment