| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!

by satheesh on | 2026-11-02 03:30 PM

Share:


சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!

12 வயது சிறுமியை காதலிக்க வைத்து செல்போன் வாங்கி கொடுத்த 21 வயது இளைஞர், ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொன்ற சிறுமியின் தந்தை..!


பெரம்பலூர் அருகேவெண்பாவூர் கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து பழகி வந்த அபிமன்யூ என்ற கல்லூரி மாணவர், சிறுமியின் தந்தையால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் அபிமன்யூ (வயது 21)  இவர் அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை சந்தித்து "ஏண்டா? என் மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தாய்" என கேட்டுள்ளதாகவும், இதில்  ஆத்திரமடைந்து அபிமன்யூவை இரும்பு ராடால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.உடனடியாக அங்கிருந்து தப்பியோடிய சிறுமியின் தந்தையை பெரம்பலூர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 12 வயது சிறுமிக்கு காதல் தூது விட்டு படிக்கிற வயதில் அந்த சிறுமியின் மனதை மாற்றிய இளைஞரின் செயல் மன்னிக்க முடியாதது. பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி. இதனை காவல்துறையில் சொல்லி அந்த பையன் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விட்டு விட்டு அந்த பையனை கொலை செய்தது குற்றமா?.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார்,. தேனி.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment