by admin on | 2025-01-19 03:36 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு அருவி மூடப்பட்டது.
காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.