by satheesh on | 2026-03-18 12:01 PM
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் தேர்தல் நன்னடத்தை விதி என கந்த சஷ்டி கவசம்மறைக்கப்பட்டதால் பரபரப்பு :
சட்டமன்றத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர், படம், அறிவிப்பு பலகைகள் மறைக்கப்பட்டன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உபயிலான கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவில் கந்தசஷ்டி கவசம் அடங்கிய கல்வெட்டுகளை பணியாளர்கள் மறைத்தனர். தொடர்ந்து கோயிலில் நடந்த திருப்பணி உபயோதாரர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டன. இதையடுத்து கொடைக்கானல் இந்து முன்னணியினர், பா.ஜா.வினர் கோயிலில் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம், உபயதாரரின் பெயர்கள் மறைக்கப்பட்ட பேப்பர்கள் அகற்றப்பட்டன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக, எங்கும் இல்லாத ஒரு புதிய நடைமுறையை கொடைக்கானல் தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளதா ? இல்லையென்றால் தேர்தல் அதிகாரிகள் உருவாக்கினார்களா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !