| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க தவறிய தமிழக அரசு கண்டித்து வாய்மூடி நூதனப் போராட்டம்...!!!

by admin on | 2026-11-25 04:07 PM

Share:


பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க தவறிய தமிழக அரசு கண்டித்து  வாய்மூடி நூதனப் போராட்டம்...!!!

  பெண்கள் மீதான வன்கொடுமையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து பெரியகுளத்தில் கைகளால் வாயை மூடி நூதன மௌனப் போராட்டம் 

​தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்தும், தமிழக அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்தும் பெண்கள் கைகளால் வாயை மூடி நூதன மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில உலக பெண்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. 'தமிழ்நாடு ஆதார மையம்' சார்பாக, அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ​தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ​சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பழுதடைந்துள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களைச் சீரமைத்து, முக்கியப் பொது இடங்களில் புதிய கேமராக்களைப் பொருத்த வேண்டும். ​காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்து, இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.​தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், தொடர்ந்து ஒரு மணி நேரம் கைகளால் வாயை மூடியபடி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சமூக ஆர்வலர்கள்  பங்கேற்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment