| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

அரசியல் சாதுரியத்தில் திமுகவை மிஞ்சிய தவெக அரசு....!!! இந்து எழுச்சி முன்னணி குற்றச்சாட்டு....!!!!

by admin on | 2026-11-24 07:25 PM

Share:


அரசியல் சாதுரியத்தில் திமுகவை மிஞ்சிய தவெக அரசு....!!! இந்து எழுச்சி முன்னணி குற்றச்சாட்டு....!!!!

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தீப விவகாரம் – அரசியல் சாதுரியத்தில் திமுகவை மிஞ்சிய தவெக அரசா?


நூறாண்டு காலமாகப் பேசப்பட்டு வந்த திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில், தமிழக அரசியலுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் அம்சம் என்னவென்றால், முந்தைய திமுக அரசின் அணுகுமுறையைப் போலவே தவெக அரசும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது. தவெக அரசு ஜூன் 11, 2026 அன்று உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

திமுக ஆட்சியில் இருந்தபோது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாக ரீதியாகப் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் புதிய ஆட்சியிலும் அதே விவகாரத்தில் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தீபம் ஏற்றுவதற்கு இடைக்காலத் தடை கோரியது.

இதனால் பக்தர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுகிறது:

ஆட்சி மாறினால் அணுகுமுறையும் மாற வேண்டாமா? ஆட்சி மாறியும் இந்து பக்தர்களின் கோரிக்கையில் ஏன் மாற்றம் இல்லை?

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு

நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம், நவம்பர் 24 கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி இருப்பினும் தமிழக அரசு மறுஆய்வு மனுவையும் தாக்கல் செய்தது.

144 தடை உத்தரவு – பக்தர்களின் மனக்குமுறல்

தீபம் ஏற்ற வேண்டிய நாளில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு, பெருமளவிலான காவல்துறையினர் குவிப்பு, பக்தர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் என நிலைமை மேலும் பதற்றமடைந்தது.

நவம்பர் 24 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை, உச்சநீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 258 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

அரசியல் ரீதியாக தவெக செய்த தவறு என்ன?

விஜய் அவர்கள் அரசியலுக்கு வரும்போது மாற்றத்திற்கான அரசியல், புதிய நிர்வாகம், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு என்ற வாக்குறுதிகளை முன்வைத்தார்.ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் அணுகுமுறையிலிருந்து தவெக அரசு வேறுபட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பு. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, முருக பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கையும் பாதுகாத்திருக்க வேண்டியது அரசின் கடமை.

உண்மையான அரசியல் வெற்றி எது?

திமுகவை அரசியல் ரீதியாக விமர்சிப்பது எளிது. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட அதே பிரச்சினையைத் தவெக ஆட்சியும் எதிர்கொள்ளும்போது, புதிய தீர்வை வழங்குவதில்தான் அதன் அரசியல் வெற்றி இருக்கிறது. திமுகவை அரசியல் அணுகுமுறையில் மிஞ்சிவிட்டதா தவெக? அல்லது திமுகவின் தவறுகளையே மீண்டும் தொடர்கிறதா என்ற கேள்விக்கு இந்த விவகாரம் பதில் சொல்ல வேண்டும்.

எங்களின் உறுதியான கருத்து:

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தீபம் என்பது வெறும் அரசியல் பிரச்சினை அல்ல. இது கோடிக்கணக்கான இந்துக்களின் ஆன்மிக உணர்வு சார்ந்த பிரச்சினை.

முதல்வர் விஜய் அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் ஆட்சியை மாற்றியது வெறும் முதல்வரை மாற்றுவதற்காக மட்டுமல்ல; ஆட்சி செய்யும் அணுகுமுறையும் மாற வேண்டும் என்பதற்காகத்தான்! நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதும், மத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமை.

திமுகவை மிஞ்சுவது அரசியல் சாதனை அல்ல; திமுக செய்த தவறுகளைச் செய்யாமல் இருப்பதுதான் தவெக அரசின் உண்மையான சாதனை!


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு அரோகரா! 

க. இராமராஜ் தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment