| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போலீஸ் நிலையத்தில் டிரைவர் உயிரிழப்பு - அதிர்ச்சி ! இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் !!

by satheesh on | 2026-11-15 11:29 AM

Share:


போலீஸ் நிலையத்தில் டிரைவர் உயிரிழப்பு -  அதிர்ச்சி ! இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் !!

மதுரையில் அதிர்ச்சி - காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் உயிரிழப்பு :

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே தனது லாரியில் ஏற்றி வந்த ஏலக்காய் மூட்டைகள் தீப்பிடித்து எரிந்ததாக புகார் கொடுக்க அவர் காவல் நிலையம் வந்துள்ளார். அந்த புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய போலீசார், அவரை விசாரணைக்காக அழைத்து, காவல் ஆய்வாளர் அறையில் அமர வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க போலீசார் வெளியே சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது, அவர் கழிவறையில் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. புகாரில் முரண்பாடு இருந்ததால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.*பாலகிருஷ்ணன் மரணம்: மதுரை மாவட்ட காவல் துறை விளக்கம்*

காவல்துறை அறிக்கை விவரம் : புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பணியில் இருந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், இவ்வழக்கின் விசாரணை சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது.

என் கணவர் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல தைரியமானவர். இவர் மேல மட்டுமே கேஸ் போட்டு அழுத்தம் கொடுத்திருக்காங்க - பாலகிருஷ்ணனின் மனைவி கண்ணீர் பேட்டி.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment