| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்....!!! முதல்வர் மௌனம் பொதுமக்கள் அதிருப்தி....???

by admin on | 2026-11-14 07:46 PM

Share:


விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்....!!! முதல்வர் மௌனம் பொதுமக்கள் அதிருப்தி....???

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்

முதல்வர் மவுனத்தால் மக்கள் கடும் அதிருப்தி

* அறிக்கை கேட்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

-மா.பாண்டியராஜ்.


கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விளக்கம் அளிக்காததும், நடவடிக்கை எடுக்காததும் ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றதால் உள்துறை அமைச்சர் அறிக்கை கேட்கிறார்.


தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியாவின் எந்த இடத்தில் பணிபுரிந்தாலும், உலகின் எந்த இடத்தில் பணிபுரிந்தாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உட்பட முக்கிய பதவிகள் வகிக்கும் அதிகாரிகள் ஜனாதிபதியால் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றனர். இந்த துறைகள் தான் இவர்களுக்கு சம்பளமும் வழங்குகிறது.


இவர்கள் மீது மத்திய அரசின் அனுமதியில்லாமல், மாநில அரசு கூட நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த அளவு மிகவும் வலுவான பாதுகாப்பு நிறைந்தது இவர்களுடைய பணி. இவர்களது அதிகாரமும் உச்ச வரம்பு உடையது. முதல்வர் போல் தலைமைப்பதவியில் இருப்பவர்களின் உத்தரவுகளை கூட மறுத்து சூழலுக்கு எது சரியோ, மக்களுக்கு எது சரியோ? அந்த முடிவினை எடுக்கும் அளவுக்கு அதிகாரம் நிறைந்த பதவியில் இருக்கிறார்கள்.


தேவைப்பட்டால், யாரையும் கேட்காமல்  துப்பாக்கியை பயன்படுத்தும் அதிகாரம் கூட இவர்களுக்கு இருக்கிறது. மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்துபவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்குவதும் கூட இவர்களது பணிகளில் ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற பதவிகளை தவிர வேறு பாதுகாப்பான பதவிகளை யாராலும் வழங்க முடியாது. இப்படிப்பட்ட பதவியி்ல் இருக்கும், அதுவும் மாவட்ட ஆட்சியர் என்ற உச்சகட்ட அதிகார பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு தான், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் விஷமத்தனமான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், குடித்து விட்டு, அவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டி களேபரம் செய்ததாகவும், தகவல்கள் பரவி தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது.


இது தொடர்பாக அத்தனை ஆதாரங்களையும் தலைமை செயலாளருக்கு கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ்., அதிகாரிகள் தவெக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒன்று சம்பவமே நடக்கவில்லை என முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் வெளிவரும் தகவல்களை பார்த்தால், இதுவரை அமைதி காத்த முதல்வரின் நடவடிக்கைகளை கவனித்தால், சம்பவம் நடந்தது உண்மை என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர் என்பது தெளிவாகி விட்டது.


இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் மீது வழக்கு பதவி செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அவரை அரசியல் பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைப்பதன் மூலம் பெண்களின் பாதுகாவலன் என்ற  தனது பட்டத்தை தக்க வைக்க வேண்டும். இந்த வழிகளை தவிர வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.


காரணம் எதிர்கட்சிகள் அனைத்தும் தவெகவை விடாமல் வறுத்தெடுக்கின்றன. மக்களின் அதிருப்தி குறித்து மத்திய அரசுக்கும் உளவுத்துறை தகவல் சொல்லி விட்டது. இப்படி ஒரு சம்பவம் இந்தியாவி்ல் நடப்பது இதுவே முதன்முறை என்பதால், உள்துறை அமைச்சகம் கடுமையான கோபத்தில் உள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக அரசின் மவுனம் உள்துறை அமைச்சகத்தின் கோபத்தை மேலும் துாண்டி விட்டுள்ளது.


இதனால் தான் கவர்னரை அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை வாங்கி உள்ளார். தமிழக அரசிடமும் இந்த சம்பவம் தொடர்பாக தனி அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தத்தில் தமிழகமே பற்றி எரியும் இந்த விவகாரத்தில் முதல்வர் விளக்கம் அளிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு எதிராகவே சூழல் அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment