| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தேனியில் தீ விபத்து தப்பிய கேரள மாணர்கள...???' போலீசார் விசாரணை...?/

by admin on | 2026-11-08 01:20 PM

Share:


தேனியில் தீ விபத்து தப்பிய கேரள மாணர்கள...???' போலீசார் விசாரணை...?/

பெரியகுளம் அருகே கேரளா சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து பேருந்தில் பயணித்த மாணவர் மற்றும் ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் உடைமைகள்முழுவதுமாக எரிந்து சேதம்


தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கேரளா மாநிலம் பாலக்காடு அருகே ஒத்தபாலம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் சுற்றுலா வந்த தனியார் பேருந்து கொடைக்கானல் சென்றுவிட்டு இன்று மூணாறு செல்வதற்காக தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி புறவழிசாலையில் சென்று கொண்டு இருந்த பொழுது பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வரவே ஆசிரியர்களும், மாணவர்களும் கூச்சலிடவே நிலைமையை உணர்ந்த ஒட்டுநர் உடனடியாக சாலை ஒரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பேருந்தில் பயணித்த  மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறியதால் மாபெரும் விபத்து மற்றும் உயிரழப்பு தவிர்க்கபட்டது 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு பெரியகுளத்தில் இருந்தும் வத்தலகுண்டில் இருந்தும் தேனியில் இருந்தும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் தீபற்றிய தீயை அணைத்தனர் 

மேலும் தேவதானப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர் 

எதிர்பாராத விதமாக பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரின் உடைமைகள் அனைத்தும் தீயில் எறிந்து சாம்பல் ஆயின

மேலும்இதுகுறித்து காவல்துறையின தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்



WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment