| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் வாகனங்களுக்கு தடை! கலெக்டர் அதிரடி உத்தரவு !!

by satheesh on | 2026-11-04 09:49 PM

Share:


கொடைக்கானலில் வாகனங்களுக்கு தடை!     கலெக்டர் அதிரடி உத்தரவு !!

கொடைக்கானல் மலைச்சாலையில்  டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்  செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு :


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியரும் மண்டல போக்குவரத்து அலுவலருமான துர்காமூர்த்தி உத்தரவு !


டிசம்பர் 1 முதல் 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம் ஆகியவை காட்ரோடு முதல் கொடைக்கானல் செல்லும் சாலை, அய்யம்பாளையம் – சித்தரேவு – தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை. தருமத்துப்பட்டி – பன்றிமலை – மணலூர் – தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை, ஒட்டன்சத்திரம்  - பாச்சலூர் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை. பழனி - சவரிக்காடு – வடகவுஞ்சி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை, பெரியகுளம் கும்பக்கரை பிரிவு – அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை ஆகிய சாலையில் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment