by admin on | 2026-10-29 05:05 PM
*எஸ்ஐஆர் மூலம் வாக்காளரின் வாக்குரிமை நீக்கப்பட்டிருந்தால் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்*
*சிறையில் போதைப்பொருள் கிடைக்கின்றது, சிறை மரணங்கள் நடக்கின்றது இதனை அரசு கண்காணித்து பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி*
தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது
தீபாவளி பண்டிகை தற்போது மது பிரியர்களின் பண்டிகையாக மாறிவிட்டது, தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயிப்பது பண்டிகையின் மாண்பை சீர்குலைக்க வைக்கிறது, எனவே தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் என 15 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்
நடிகர் பிரகாஷ்ராஜ் எஸ்.ஐ.ஆர் மூலம் பல வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறுகிறார்
எஸ்ஐஆர் நடவடிக்கை மூலமாக நாட்டில் எந்த வாக்காளர்களின் வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை, எஸ்ஐஆர் மூலம் வாக்காளரின் வாக்குரிமை நீக்கப்பட்டிருந்தால் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன் என சவால் விடுத்தார்
மூன்று மாநிலத்தில் நான்கு வாக்குரிமை வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ் தான் வாக்கு திருடன், அவரின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்
கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு மறைமுக உறவு வைத்துக் கொண்டு தவெக அரசை கவிழ்க்க வேண்டும் என முயற்சித்து வருகிறது என்று விமர்சனம் செய்தார்
தொடர்ந்து பேசிய அவர் வருகிற கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தார்
மேலும் சிறைத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும், சிறைக்குள் போதைப் பொருள் கிடைத்துகிறது, சிறை கைதிகள் மரணம் நடக்கிறது இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்
T.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு …..!!! இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்.....!!!!!
கழுத்தை இறுக்கி கணவன் கொடூர கொலை ! த வெ க நிர்வாகி அதிரடி கைது !!
தேனி சிறைச்சாலையில் மதுரை டிஐஜி விசாரணை....!!!!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள்....!!!
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வனத்துறை! இரண்டு தேசிய விருதுகளை பெற்று அசத்தல் !!