by satheesh on | 2026-10-19 04:44 PM
தேனி மாவட்டம் கம்பத்தில், இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சினிமா பார்க்க சென்றவருக்கு, வழியில் ஏற்பட்ட வாய்த்தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டார். கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரபு (32). இவர் கம்பத்தில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் அதே கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பிரபு, தனது மனைவி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் கம்பம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள திரையரங்கத்திற்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, கம்பம் புறவழிச்சாலை ஊத்துக்காடு பிரிவு அருகே பிரபு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கம்பம் கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், கிரி மற்றும் வருசநாடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்து உள்ளனர். அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனமும், பிரபுவின் வாகனமும் லேசாக உரசிச் சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு பிரபு அங்கிருந்து தனது மனைவியுடன் புறப்பட்டுத் திரையரங்கத்திற்குச் சென்றுள்ளார். திரையரங்கத்தில் தனது மனைவியை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக திரையரங்கு பார்க்கிங் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ரஞ்சித், கிரி மற்றும் முத்துப்பாண்டி ஆகிய மூவரும் அங்கு வந்து பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிர்தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு கீழே சரிந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக கம்பம் வடக்குக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் வடக்குக் காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்து கிடந்த பிரபுவை மீட்டுச் சிகிச்சைக்காகக் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபுவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 14 ம் தேதி அன்று காலை பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொடைக்கானலில் போதைப் பொருட்கள் பறிமுதல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ் !!
காதலியை கொலை செய்து எரித்த கொடூரம் ! கேரள காதலன் அதிரடி கைது !!
பைக் உரசிய விவகாரம் - சினிமா தியேட்டரில் இளைஞரை கொடூரமாக கொலை செய்த கும்பல் !!
பழனி கோயில் நகை திருட்டு ! இளம் பெண் - கள்ளக்காதலன் அதிரடி கைது !!
ஏழு வயது சிறுமி மாயம் - துப்பு துலங்காமல் நீடிக்கும் மர்மம் ! தனிப் படைகள் அமைத்து தீவிரமாக தேடும் போலீஸ் !!