| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மக்கள் தொடர்பு முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி....!!!!

by admin on | 2026-10-14 06:08 PM

Share:


மக்கள் தொடர்பு முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி....!!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா  டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில், பொதுமக்களிடம் மனுக்கள்  பெற்று    230  பயனாளிகளுக்கு  ரூ.1.78 கோடி மதிப்பீட்டில்  அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி,  இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் !!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், டி.சுப்புலாபுரம் கிராமத்தில் இன்று (14.10.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மக்கள் தொடர்புத்

திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,

மக்கள் மாவட்ட நிர்வாகத்தைத் தேடி வந்த நிலை மாறி, மாவட்ட நிர்வாகமே மக்களைத்தேடி முகாமிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசு உத்தரவிட்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள்தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றது. அந்த வகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு                                  ஆண்டிபட்டி வட்டம், டி.சுப்புலாபுரம்  கிராமத்தைத் தேர்வு செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்து 79 மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையிலும், மேலும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் நடவடிக்கை என தற்பொழுது 230 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இன்று 300 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களின் மனுக்களுக்குத் தீர்வு கிடைக்கச் செய்வதாகும். அதேபோல் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதே முக்கிய நோக்கமாகும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


அரசின் நலத்திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அரங்குகளில் அரசின் நலத்திட்டங்கள், அவற்றைப் பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொண்டு, அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான திட்டங்கள் குறித்த சந்தேகங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

பொதுமக்கள்  தங்கள் பகுதியில் முகாம்கள் நடைபெறும்பொழுது தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்  

8 பயனாளிகளுக்கு ரூ.1,97,160/- மதிப்பிலான விலையில்லா நத்தம் வீட்டுமனைப் பட்டாக்களையும், 9 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (முழுப்புலம்), 5 பயனாளிகளுக்கு உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல், 68 பயனாளிகளுக்கு ரூ.29,92,000/- மதிப்பிலான 

இ-பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ.8,32,500/- இயற்கை மரண உதவித்தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகைகளையும்,  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.80,00,000/- மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்-சேய் நலப்பெட்டகங்களையும், நலதொழிலாளர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.6,56,000/- திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகைகளையும்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூ.50,90,000/- மதிப்பிலான  மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.500/- மதிப்பிலான இடுப்பொருட்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.19,000/- மதிப்பிலான விதை தொகுப்புகளையும் என மொத்தம் 230  பயனாளிகளுக்கு ரூ.1,77,87,160/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப.,  அவர்கள் வழங்கினார். 


முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.  

இந்நிகழ்வில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், சார் ஆட்சியர் பெரியகுளம் திரு.தவலேந்து, இ.ஆ.ப., தனித்துணை  ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.கிரிஜா,  துணை இயக்குநர் (தோட்டக்கலை) திருமதி நிர்மலா, உதவி இயக்குநர் (நில அளவை) திரு.அப்பாஸ், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திரு.முகமது மசூத்,  வட்டாட்சியர் (ஆண்டிபட்டி) திரு.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment