by satheesh on | 2026-10-06 06:20 PM
“காருக்குள் மசாஜ் - 5 பவுன் செயின் மாயம் ! அதிர்ச்சி – மதுமிதாவை சுற்றி மீண்டும் கிளம்பிய பரபரப்பு :
சோஷியல் மீடியாவில் பணம், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பர வாழ்க்கை என தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர் யூடியூபர் மதுமிதா. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அவரது வீட்டில் நடந்ததாக கூறப்படும் மிகப்பெரிய நகைக் கொள்ளை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையர்கள் பிடிபட்ட பிறகும், புகாரில் குறிப்பிடப்பட்டதாக சொல்லப்படும் நகைகளின் எண்ணிக்கைக்கும் மீட்கப்பட்ட நகைகளின் அளவுக்கும் இடையே இருந்த வித்தியாசம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த பரபரப்பு இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இன்னொரு நகை விவகாரம் இப்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மதுமிதா மீது தற்போது புகார் கொடுத்திருப்பவர் நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து. பிசியோதெரபி சிகிச்சை தொடர்பாக மதுமிதாவுடன் ஏற்கனவே அறிமுகம் இருந்ததாக கூறப்படும் நிலையில், 2022-ம் ஆண்டு அவர் பிசியோதெரபிஸ்ட் என்ற பெயரில் ஸ்பாக்களில் வேலை செய்த காலகட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. நெல்லை நீதிமன்றம் அருகே பேச்சிமுத்துவின் காரில் மதுமிதா ஏறியதாகவும், அவருக்கு காருக்குள் மசாஜ் செய்ததாகவும், பின்னர் அவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு பேச்சிமுத்து தனது வீட்டுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்ததாக புகார் கூறுகிறது. கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருப்பதை அப்போதுதான் கவனித்ததாகவும், அந்த நகையை மதுமிதா எடுத்ததாக சந்தேகிப்பதாகவும் பேச்சிமுத்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதோடு மட்டும் நிற்காமல், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தன்னை அசிங்கப்படுத்திவிடுவதாக மதுமிதா மிரட்டியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்தச் சம்பவம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன் மீண்டும் பேசப்படுகிறது என்பதுதான் இந்த விவகாரத்தின் முக்கியமான கேள்வி. ஏற்கனவே மதுமிதாவைச் சுற்றி ஸ்பா தொடர்பான புகார் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் பேசப்பட்டுள்ளன. அந்தப் பின்னணியில் சமீபத்திய நகைக் கொள்ளை விவகாரம் பெரும் கவனம் பெற்ற நிலையில், 2022-ம் ஆண்டு தொடர்பான இந்த 5 பவுன் சங்கிலி புகாரும் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் மதுமிதாவைச் சுற்றியுள்ள பழைய, புதிய சர்ச்சைகள் அனைத்தும் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகின்றன. இன்னொரு விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்த சம்பவங்கள் கிடையாது. பழைய சம்பவங்கள், சமீபத்தில் நடந்த நகைக் கொள்ளை, அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் பழைய புகார் என வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த விஷயங்கள் அடுத்தடுத்து பேசப்படுவதால்தான் இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக, இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவிலும் மதுமிதா தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது குறித்தும் இணையத்தில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த 5 பவுன் சங்கிலி விவகாரம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், சம்பவம் நெல்லையில் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளதால், மேல் நடவடிக்கைக்காக வழக்கு நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா, இந்தச் சம்பவத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதுதான் இனி கவனிக்க வேண்டிய விஷயம்.?
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
காருக்குள் மசாஜ் - 5 சவரன் மாயம் ! அதிர்ச்சி அடைந்த பில்டிங் காண்ட்ராக்டர் - மதுமிதா மிரட்டியதாக போலீசில் புகார் !!
தங்க நகை - சமூக வலைதள பிரபலம் மதுமிதா மீது திருட்டு வழக்கு.!
போதை மாத்திரைகள், டானிக் விற்பனை - பட்டாகத்தி டூ வீலர் பறிமுதல்! சிறுவன் உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!!
மது போதை மறுவாழ்வு மையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ! செய்தியாளர் உட்பட 2 பேர் அதிரடி கைது !!
ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துக்களை அபகரித்ததாக போலீசில் புகார் ! போலீஸ் மற்றும் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு !!