by admin on | 2026-11-15 08:49 PM
-கப்பலோட்டிய தமிழன் ஐயா
வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்வு - 90 வது நினைவு தினம்-18.11.2026.
-தேசிய தலைவர், உலகிற்கே வீரத்தையும்,தியாகத்தையும் அரிய செய்தவர்,வரலாற்று நாயகன்,அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவர், ஆங்கிலேய ஏகாதிபதி வணிகத்திற்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனம் நிறுவிய துணிச்சல்ளுக்கு சொந்தக்காரர்,மேலும் வணிகம்,அரசியல் மற்றும் தொழிலாளர் உரிமை என பல தளங்களில் தனது முத்திரையை பதித்தவர்,
ஒரு புகழ்பெற்ற மற்றும் நேர்மையான வழக்கறிஞராகவும், திகழ்ந்தவர்,நமது சமுதாயம் மற்றும் இன கடவுள் ஐயா
வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90 வது நினைவு தினம் வருகின்ற 18 ஆம் நாள் புதன் கிழமை அன்று நமது அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக,நமது அமைப்பின் தலைவர் ஐயா ஓம் சக்தி ராமசந்திரன் பிள்ளை அவர்களின் தலைமையில் (திருநெல்வேலி அனைவரும் ஒன்றினைத்து )ஓட்டப்பிடாரத்தில் உள்ள ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் இல்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யபடுகிறது. இந்த நிகழ்விற்கு நமது அனைத்து மாவட்டம் நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள்,மகளிர் அணியினர்கள் மற்றும் நம் இன சமுதாய தலைவர்கள் சமுதாய சொந்தங்கள்,சமுதாய இளைஞர்கள் என அனைவருக்கும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.நமது AIMPA சொந்தங்கள் தமிழ்நாடு அளவிலும் மற்றும் குறிப்பாக அருகில் உள்ள மாவட்டகளான தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகர்,தென்காசி,மதுரை ஆகிய மாவட்டம் சார்ந்த நம் உறவுகள் தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய நமது சொந்தங்களை ஒருங்கிணைத்து,வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி நடைபெறும் ஓட்டப்பிடாரத்தில்,சமுதாய உணர்வோடும்,இன உணர்வோடும், அனைவரையும் கலந்து கொள்ள செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும்,தேசபற்றையும், சுதேசிய சிந்தனையையும், தன்னபிக்கையையும்,தைரியத்தையும் நம் அடுத்த சமுதாய தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் கடமை.ஒன்றிணைவோம்! வாரீர்!!!நம் சமுதாய உணர்வு மற்றும் ஒற்றுமைகாக செயல்படும் உங்களின் ஒருவன்,
மஹேஸ் முத்துக்குமார்,
மாநில இளைஞர் அணி செயலாளர்,அமைப்பின் ஜெயந்தி/குரு பூஜை விழா ஒருங்கிணைப்பாளர்,
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்.
செல் 7708232321.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244
வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அழைப்பு....!!!
புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!
போலி போக்சோ வழக்கு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் …..??
கொடைக்கானலில் போதை காளான் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !!
போலீஸ் நிலையத்தில் டிரைவர் உயிரிழப்பு - அதிர்ச்சி ! இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் !!