by admin on | 2026-11-13 06:16 PM
*திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு" உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற வேண்டிப் பழனி திருஆவினன்குடியில் இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் தீபம் ஏற்றி வழிபாடு!!
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முடிந்தும் தற்போதும் நன்கொடை வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு!*
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த உத்தரவுகளைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பான வழக்கு வரும் 17-11-2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் முருக பக்தர்களுக்கு ஆதரவாக வெற்றி கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யும் வகையில், இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார்,
மாநிலச் செயலாளர் M.மனோஜ்குமார், அக்கப்போர் இயக்கத் தலைவர் வழக்கறிஞர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (13-11-2026) பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு நகல்களை முருகப்பெருமானின் திருச்சந்நிதியில் வைத்து வழிபட்ட அவர்கள், கோயில் வளாகத்தில் பஞ்சதீபம் ஏற்றிச் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராமரவிக்குமார் கூறியதாவது:
"வரும் நவம்பர் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. முருக பக்தர்களின் உணர்வுகள் மற்றும் பிரார்த்தனையால் இவ்வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் வெற்றி தீபம் ஏற்றப்படும். இதற்காக உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றிப் பிரார்த்திக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் அரசு சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.
ஆனால், மாநாடு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதற்கான வரவு-செலவு கணக்கு வழக்குகள் இதுவரை மக்களிடம் வெளியிடப்படவில்லை.
தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது?
தனியார், அறங்காவலர்கள், ஆதீனகர்த்தர்கள் மற்றும் கொடையாளர்களிடம் எவ்வளவு கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டது?
திருக்கோயில் நிர்வாகம் செய்த செலவு எவ்வளவு? என்ற விவரங்களைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை".
"ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; முருகன் மாநாடு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும்,
'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' என்ற பெயரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிக் கணக்குகளில் இன்றளவும் நன்கொடை வசூல் நடந்து கொண்டிருக்கிறது.
நானே கடந்த 29-10-2026 அன்று ரூ.200 நன்கொடை அனுப்பியுள்ளேன்;
பல அன்பர்களும் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் பணம் செலுத்துவோருக்கு முறையான ரசீது கூட வழங்கப்படுவதில்லை.
முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் கொட்டுவது போல, முடிந்த மாநாட்டிற்கு எதற்காக இன்னமும் வசூல் நடக்கிறது?"
"பெரியார் உலகம் நூலகத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவது போல, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.
இதுகுறித்து 30-10-2026 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவு, அறநிலையத்துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு 7 புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக முருகன் மாநாட்டு வரவு-செலவு கணக்குகளை வெளியிட வேண்டும்; இல்லையெனில் அனைத்து ஆதாரங்களுடனும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்" எனக் கூறினார்.
இராம இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி
நிறுவன தலைவர்
9655365696
செய்தியாளர் பிரேம் குமார் சென்னை
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு...!! உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற பழனியில் வழிபாடு...!!"
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கை...???
தேனியில் நாட்டு நலப்பணி திட்ட விழிப்புணர்வு பேரணி துவக்கம்....!!""
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். ….!!!
டாஸ்மாக் கடையில் மது விற்பனை அதிகரித்திருப்பது குறித்து ஆர்.வி.ஆர் கேள்வி பதில்கள்....!!