by admin on | 2026-11-05 04:25 PM
*தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளருக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல்*
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்களை மிரட்டி, பாலியல் தொல்லை மற்றும் கடும் கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டி பணியில் பணியாற்றி வருபவர் I. தங்கமணி (கம்பம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்). இவர் தனது குடும்பச் சூழல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்கள் விடுப்பு எடுத்த நிலையில், இவரைப் பணியில் சேரவிடாமல் முன்னாள் இராணுவ வீரரான (Ex-Army) ASO பழனிச்சாமி என்பவர் தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, ASO பழனிச்சாமி தன்னிடம் பாலியல் ரீதியாகவும், தகுதியற்ற முறையிலும் நடந்து கொண்டதாகவும், 'நான் சொல்வதைக் கேட்டால் மட்டுமே வேலை பார்க்க முடியும்' என மிரட்டியதாகவும் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் உரிய சீருடை அணியாமல் தன்னிச்சையாகச் செயல்படும் பழனிச்சாமி, மருத்துவமனை விதிகளுக்குப் புறம்பாக வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளன. குறிப்பாக, வேலை கேட்டுச் செல்லும் பெண்ணிடம், 'உன்னை வேலையை விட்டு நீக்குவதோடு மட்டுமின்றி, காரை ஏற்றி கொன்றுவிடுவேன்; உன் குடும்பத்திற்கும் உனது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை' என்று கூறி கடுமையான கொலை மிரட்டல் விடுத்து வருவதாகப் பாதிக்கப்பட்ட பெண் கதறித் துடிக்கிறார்.
மருத்துவமனை வளாகத்திலுள்ள அனைத்து கடைகளிலும் வசூல் செய்து அதிகாரிகளுக்குக் கொடுப்பவராகவும், தன் மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று திமிராகத் திரிவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை மீதான முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தன் குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி, இரண்டு பெண் குழந்தைகளுடன் தவிக்கும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளி பழனிச்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலும், தொடர் கொலை மிரட்டல்களும் நிலவுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."
தி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் .9842337244
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஏ எஸ் ஓ பழனிச்சாமி.....???
சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"
கொடைக்கானலில் வாகனங்களுக்கு தடை! கலெக்டர் அதிரடி உத்தரவு !!
காதல் போட்டி - பிளஸ் 1 மாணவன் கொடூர கொலை ! 1 சிறுமி, 1 சிறுவன் உட்பட மூன்று பேர் கைது - அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம் !!
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!