by admin on | 2026-10-29 07:23 PM
குமரியின் ஹீரோ இனி தென்காசியில்
தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்டாலின் IPS பொறுப்பேற்க உள்ள செய்தி தென்காசி மக்களுக்கு மட்டுமல்ல, கன்னியாகுமரி மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
குமரியில் சுமார் 20 மாதங்கள் அவர் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது. - கனிமவள கொள்ளை தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தது, ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை என ஒவ்வொரு விஷயத்திலும் தனி முத்திரை பதித்தவர்.
அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோது குமரி மக்கள் உண்மையிலேயே வருத்தப்பட்டார்கள். - இப்போது அண்டை மாவட்டமான தென்காசிக்கு வருவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.- இவரிடம் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா? பதவியின் கர்வம் இல்லாத எளிமை.- பொதுவாக ஒரு SP-யை பார்க்கவே மக்கள் தயங்குவார்கள். ஆனால் இவரை ஒருமுறை சந்தித்தாலே போதும், நம்முடன் படித்த பள்ளி நண்பனை போல, நம் வீட்டு சகோதரனை போல உணர வைத்து விடுவார்.- இரவு என்றாலும் பகல் என்றாலும் ஒரு சாமானியன் அனுப்பும் குறுஞ்செய்திக்கு கூட பதில் அளித்து நடவடிக்கை எடுக்கும் மனிதர். - எந்த சிபாரிசும் இல்லாமல் நேரடியாக சென்று நீதி கேட்கலாம் என்ற நம்பிக்கையை குமரியில் உருவாக்கியவர்.- அதிகாரத்தில் இருப்பது பெரிதல்ல, அந்த அதிகாரத்தை கொண்டு சாமானியனின் குரலுக்கு செவி சாய்ப்பதுதான் பெரிது. அதை செய்து காட்டியவர்.- பாஸ்போர்ட் விசாரணை, NOC என எந்த பணிக்கும் லஞ்சம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல், பயம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் நிலையை உருவாக்க வேண்டும். - காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக இருந்து அதை சாதித்து காட்டியவர்.- கன்னியாகுமரியில் மக்கள் மனதில் இடம் பிடித்தது போல, தென்காசியிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக பணியாற்றுவார் என்பது உறுதி.- தென்காசி மக்களே, உங்களுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்திருக்கிறான், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் வந்திருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்டாலின் IPS பொறுப்பேற்க உள்ள செய்தி தென்காசி மக்களுக்கு மட்டுமல்ல, கன்னியாகுமரி மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
குமரியில் சுமார் 20 மாதங்கள் அவர் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது. கனிமவள கொள்ளை தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தது, ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை என ஒவ்வொரு விஷயத்திலும் தனி முத்திரை பதித்தவர்.அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோது குமரி மக்கள் உண்மையிலேயே வருத்தப்பட்டார்கள்.
இப்போது அண்டை மாவட்டமான தென்காசிக்கு வருவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.இவரிடம் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா? பதவியின் கர்வம் இல்லாத எளிமை.பொதுவாக ஒரு SP-யை பார்க்கவே மக்கள் தயங்குவார்கள். ஆனால் இவரை ஒருமுறை சந்தித்தாலே போதும், நம்முடன் படித்த பள்ளி நண்பனை போல, நம் வீட்டு சகோதரனை போல உணர வைத்து விடுவார்.இரவு என்றாலும் பகல் என்றாலும் ஒரு சாமானியன் அனுப்பும் குறுஞ்செய்திக்கு கூட பதில் அளித்து நடவடிக்கை எடுக்கும் மனிதர். எந்த சிபாரிசும் இல்லாமல் நேரடியாக சென்று நீதி கேட்கலாம் என்ற நம்பிக்கையை குமரியில் உருவாக்கியவர்.
அதிகாரத்தில் இருப்பது பெரிதல்ல, அந்த அதிகாரத்தை கொண்டு சாமானியனின் குரலுக்கு செவி சாய்ப்பதுதான் பெரிது. அதை செய்து காட்டியவர்.
பாஸ்போர்ட் விசாரணை, NOC என எந்த பணிக்கும் லஞ்சம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல், பயம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் நிலையை உருவாக்க வேண்டும்.
காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக இருந்து அதை சாதித்து காட்டியவர்.
கன்னியாகுமரியில் மக்கள் மனதில் இடம் பிடித்தது போல, தென்காசியிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக பணியாற்றுவார் என்பது உறுதி.
தென்காசி மக்களே, உங்களுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்திருக்கிறான், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் வந்திருக்கிறது.
T. முத்து காமாட்சி எவிடென்ஸ் வெளியீட்டாளர் 9842337244.
-