by satheesh on | 2026-10-18 10:53 PM
சிறுமி எங்கே?".. விழுப்புரம் 7 வயது சிறுமி ஹேமலதா விவகாரத்தில் அதிரடி திருப்பம். 100 போலீசார், 8 தனிப்படைகள் தேடும் திடுக்கிடும் பின்னணி..!
செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த 12ஆம் தேதி அதிகாலை முதல் திடீரென காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, மறுநாள் அதிகாலை வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் மாயமாகியுள்ளதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின்பேரில் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 100 போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.சிறுமி மாயமாகி ஒரு வாரத்தை நெருங்கியும் எந்தவித துப்பும் கிடைக்காததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் தங்கியிருந்து, அதன் பின் திடீரென தலைமறைவான தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியார் சரவணன் மற்றும் அவரது மனைவியை போலீசார் தற்போது பிடித்து விசாரித்து வருகின்றனர். செல்போன் எண் சிக்னல் அடிப்படையில் விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் பதுங்கியிருந்த அவர்களைக் கண்டறிந்து, சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் துப்பு துலக்குவதை விரைவுபடுத்தும் வகையில், அப்பகுதியில் கடந்த 11ஆம் தேதி இரவு முதல் 12ஆம் தேதி அதிகாலை வரை பதிவான 500-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், கிணறுகள், நீர்நிலைகள், முட்புதர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. குற்றப் பின்னணி உடையவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்தத் தகவலும் உறுதியாகவில்லை. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறுமி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என வடக்கு மாவட்ட செயலாளர் குணசரவணன் அறிவித்துள்ளார். இதற்கிடையில், மாவட்ட தவெக நிர்வாகிகள் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அமைச்சர் ஆனந்திடம் தொலைபேசி வாயிலாகவும் பேச வைத்துள்ளனர். சிறுமியின் புகைப்படம் அடங்கிய நோட்டீஸ்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சிறுமி விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும் பெற்றோரும் காத்திருக்கின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஏழு வயது சிறுமி மாயம் - துப்பு துலங்காமல் நீடிக்கும் மர்மம் ! தனிப் படைகள் அமைத்து தீவிரமாக தேடும் போலீஸ் !!
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் பொது மக்களுக்கு நெல்லை கலெக்டர் எச்சரிக்கை.....!!!!!
சபலத்தால் சதி வலையில் விழுந்தேன் - கோடிகளை இழந்தேன் ! வாக்கு மூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி !!
பிழைப்பிற்கு குளத்தில் தாமரைப்பூ பறித்த முதியவர் ! கண்காணித்து 1.5 லட்சம் அபதாரம் விதித்து வனத்துறை அசத்தல் !!
மாணவனை விடுவிக்க லஞ்சம் ! S S I சஸ்பெண்ட் - எஸ் பி அதிரடி !