by satheesh on | 2026-10-06 08:11 AM
திருட்டு புகாரில் மதுமிதா மீது வழக்கு :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த சமூக வலைத்தளங்களில் பிரபலமான மதுமிதா மீது 5 பவுன் செயின் திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரில், பிசியோதெரபி சிகிச்சையின் போது மதுமிதா அறிமுகமானதாகவும், கடந்த 2022-ல் திருநெல்வேலி நீதிமன்றம் அருகே தனது வாகனத்தில் அவர் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் மதுமிதாவை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போனதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் மதுமிதா மீது ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் திருநெல்வேலியில்நடந்ததாக கூறப்படுவதால், மேல் நடவடிக்கைக்காக வழக்கை திருநெல்வேலிமாவட்டத்திற்கு மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுமிதா வீட்டில் நகைகள்திருடப்பட்டதால் பிரபலமான மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவருடைய வீட்டில் 120 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
காருக்குள் மசாஜ் - 5 சவரன் மாயம் ! அதிர்ச்சி அடைந்த பில்டிங் காண்ட்ராக்டர் - மதுமிதா மிரட்டியதாக போலீசில் புகார் !!
தங்க நகை - சமூக வலைதள பிரபலம் மதுமிதா மீது திருட்டு வழக்கு.!
போதை மாத்திரைகள், டானிக் விற்பனை - பட்டாகத்தி டூ வீலர் பறிமுதல்! சிறுவன் உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!!
மது போதை மறுவாழ்வு மையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ! செய்தியாளர் உட்பட 2 பேர் அதிரடி கைது !!
ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துக்களை அபகரித்ததாக போலீசில் புகார் ! போலீஸ் மற்றும் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு !!