by satheesh on | 2026-11-14 08:57 PM
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி உள்ளிட்ட இருவர் கைது.*
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இன்ஸ்டா இன்ஃபுளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட 2 பேர் கைது. வழக்கில் தேடப்படும் அவரது நண்பர் யூடியூபர் நிஷாந்த் தலைமறைவாக உள்ள நிலையில், நிஷாந்தின் தந்தை சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர். 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன நிலையில் 2 பேர் சிக்கியுள்ளனர்; 9 தனிப்படைக் காவலர்கள் நிஷாந்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பெண் யூடியூபர் மீனாட்சி உட்பட இரண்டு பேரைக் போலீசார் கைது செய்துள்ளனர்; இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் நிஷாந்திடம், பெண் யூடியூபர் மீனாட்சி நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நகைக்கடையில் திருடிய பிறகு நிஷாந்த் தொலைபேசி வாயிலாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு பேசியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
மீனாட்சியை விசாரித்ததில் நகைகள் மீட்பு!
மாடக்குளம் மலையடிவாரப் பகுதியில் மீனாட்சியை அழைத்து சென்று நிலத்தில் சாக்குப்பை ஒன்றில் கட்டிவைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன மீனாட்சி இதற்கு முன்பு மொபைல் போன்கள் குறித்த வீடியோக்களை வெளியிடும் டெக் பாஸ் என்ற யூடியூப் சேனல் பணியாற்றி வந்தவர் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர் . இவர் நேரடியாக நகைக்கடைக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றாலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைப்பையை வாங்கிப் பதுக்கி வைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் . நகைக்கடைக் கொள்ளை வழக்கில் பெண் யூடியூபர் ஒருவர் சிக்கியிருப்பது மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மதுரை நகைக்கடை கொள்ளை - இளம் பெண் உட்பட இருவர் கைது ! இளம் பெண் மீனாட்சி சிக்கியது எப்படி?
விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்....!!! முதல்வர் மௌனம் பொதுமக்கள் அதிருப்தி....???
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு...!! உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற பழனியில் வழிபாடு...!!"
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கை...???
தேனியில் நாட்டு நலப்பணி திட்ட விழிப்புணர்வு பேரணி துவக்கம்....!!""