by admin on | 2026-11-12 05:45 PM
பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக்கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட சமூக விழிப்புணர்வுப் பேரணி – 310-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் சமூக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே பல்வேறு சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
மேல்மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் பேரணி, பெரியகுளம் சாலை, தெற்குத் தெரு சாவடி, முதுகல்கட்டு பேருந்து நிறுத்தம், மேலத்தெரு கடைவீதி மற்றும் அம்மாபட்டி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.
இந்தப் பேரணியின்போது மாணவிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக நலன் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலவச மருத்துவ முகாம், யோகா பயிற்சி மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் கிராமப்புற மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நலம், தூய்மை மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன், பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் நல்லு, கல்லூரி முதல்வர் முனைவர்அருட்சகோ இருதய கலைச்செல்வம், செயலர் சாந்தாமேரி ஜொஷிற்றா, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரி முனைவர் ஜானிடதீஸ், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி இல்லத் தலைமை முனைவர் அருட்சகோ பாத்திமா மேரி சில்வியா, நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முனைவர் பரிமளா தேவி, ஊராட்சி மன்றப் பணியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் 310-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.
தேனியில் நாட்டு நலப்பணி திட்ட விழிப்புணர்வு பேரணி துவக்கம்....!!""
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். ….!!!
டாஸ்மாக் கடையில் மது விற்பனை அதிகரித்திருப்பது குறித்து ஆர்.வி.ஆர் கேள்வி பதில்கள்....!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விவாதம் செய்வோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!
மகளின் இறப்பு - மறையாத வடு ! குற்றவாளிக்கு ஜாமீன் - பழிவாங்கிய தந்தை !!