by satheesh on | 2026-11-18 01:00 PM
என்னை கொடுத்தேன்"- இன்ஸ்டாகிராமில் பழகி, திருமணம் செய்து ரூ.4.50 லட்சம் பணம், ஐபோன் வாங்கி மோசடி செய்ததாக வாலிபர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!
ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி (28) என்பவரை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தேனியைச் சேர்ந்த கோகுல் என்பவர் பணம் மற்றும் ஐபோன் வாங்கி ஏமாற்றியதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அந்த வாலிபர், ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த விவாகரத்தான பெண் நந்தினி (வயது28). இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவரிடம் இன்ஸ்டாகிராம் வழியாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த கோகுல் அறிமுகமானார். இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகினர். நாளடைவில் நந்தினியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த கோகுல், அவசரத் தேவை எனக் கூறி வங்கியில் தனிநபர் கடன் மூலம் ரூ.2.54 லட்சம் பணத்தையும், தவணை முறையில் ஒரு விலையுயர்ந்த ஐபோனையும் நந்தினியிடம் இருந்து பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோவிலில் நந்தினியைத் திருமணம் செய்து கொண்ட கோகுல், மறுநாளே ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் தலைமறைவானார். கோகுல் குறித்து விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமானதும், விவாகரத்தான பெண்களைக் குறிவைத்து இதுபோல் பணம் பறிப்பதும் தெரியவந்தது. திருப்பூரிலும் ஒரு பெண்ணிடம் இதேபோல் அவர் மோசடி செய்துள்ளார். மீதமுள்ள பணத்தையும் ஐபோன் தவணைத் தொகையையும் கேட்டபோது, ரூ.1.50 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு கோகுலும் அவரது உறவினர்களும் கொ**லை மிரட்டல் விடுத்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் முறையாக விசாரிக்கப்படாமல் முடிக்கப்பட்டதால், தன் பணத்தை மீட்டுத் தந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு எஸ்.பி.யிடம் நந்தினி மனு அளித்துள்ளார். விவாகரத்தான பெண்கள் ஏற்கனவே வாழ்க்கையில ஏமாற்றம் ஆகி மனம் உடைஞ்சு போயிருப்பாங்க. அவங்களை போய் ஏமாத்துறது பெரிய பாவம் என்பதே நிதர்சனம் !
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
"இன்ஸ்டா காதல்" என்னை கொடுத்தேன் - ஏமாந்தேன் ,! ஏமாற்றிய தேனி காதலன் - இளம் பெண் பரபரப்பு புகார் !!
அடுத்தடுத்து தொடர் செயின் பறிப்பு - அதிர்ந்த பெண்கள் ! மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம் !!
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு....!!!
வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அழைப்பு....!!!
புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!