by admin on | 2026-11-17 04:56 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள், சிகிச்சை முறைகள், மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புக் குறித்து பார்வையிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க வேண்டும் என நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், பெரியகுளம் சமூகநீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் வசதி, தங்கும் அறைகள், கழிப்பறை வசதிகள் மற்றும் விடுதி வளாகத்தின் தூய்மை ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், விடுதியைத் தூய்மையாகப் பராமரித்து, மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் தேவையான வசதிகளை முறையாக வழங்கிட விடுதி காப்பாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், தென்கரை பேரூராட்சி கைலாசபட்டியில் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் புதிததாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (பொ) (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.அன்புச்செழியன், செயல் அலுவலர் (தென்கரை) திரு. பசீர் அகமது உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு....!!!
வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அழைப்பு....!!!
புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!
போலி போக்சோ வழக்கு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் …..??
கொடைக்கானலில் போதை காளான் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !!