by admin on | 2026-11-15 07:42 PM
பகீர் பின்னணி! ரூ.5.5 லட்சம் லஞ்சம் கொடுத்து போலி போக்சோ வழக்கு - பெண் இன்ஸ்பெக்டர் & காவலர் சஸ்பெண்ட்!
காதல் விவகாரத்தில் தம்பியைப் பழிவாங்கத் திட்டமிட்டு, பணம் கொடுத்து போலி போக்சோ வழக்கு தொடுத்த விவகாரத்தில் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்னாள் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த்ராஜா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!
முழு விவரம்:
1. ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா என்பவர், மேட்ரிமோனி தளம் மூலம் நெய்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். பின்னர் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கடும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
2. இந்தத் திருமண முயற்சியை அந்தப் பெண்ணின் தம்பி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணா, அந்தத் தம்பியை எப்படியாவது பலிகடா ஆக்கிப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.
3. இதற்காக சென்னை திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த்ராஜா ஆகியோரை அணுகியுள்ளார். ரூ.5.5 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, 18 வயதுக்குட்பட்ட சிறுமியை வைத்து போலி புகார் அளிக்கச் செய்து போக்சோ (POCSO) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. இதனிடையே, பெண்ணைத் தொடர்ந்து தொல்லை கொடுத்த வழக்கில் கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல்துறையால் சுரேஷ் கண்ணா கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தம்பியைப் பழிவாங்கத் திட்டமிட்டு போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து போலி வழக்கு போட்ட சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது!
பொதுமக்கள் பாதுகாப்புக்கு இருக்க வேண்டிய காக்கிச் சட்டையே இப்படிப் பணத்திற்காகத் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அழைப்பு....!!!
புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!
போலி போக்சோ வழக்கு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் …..??
கொடைக்கானலில் போதை காளான் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !!
போலீஸ் நிலையத்தில் டிரைவர் உயிரிழப்பு - அதிர்ச்சி ! இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் !!