by satheesh on | 2026-11-18 08:15 AM
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - அதிர்ச்சி !
ஒரே இரவில் மூன்று பெண்களிடம் 9 பவுன் நகைகள் வழிப்பறி – மோப்ப நாய் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டை !
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இடையே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் சாந்தி என்ற பெண், இரவு நேரத்தில் ஆண்டிபட்டி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினர். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். அரப்படித்தேவன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும், அருகிலிருந்த தோட்டத்திற்குள் புகுந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் நேரில் விசாரணை மேற்கொண்டார். தப்பியோடியவர்களைத் தேட மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட போலீசார் தோட்டப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அல்லிநகரம் மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதிகளிலும் தலா ஒரு பெண்ணிடம் 2 பவுன் வீதம் மேலும் 4 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஒரே இரவில் மூன்று பெண்களிடம் மொத்தம் 9 பவுன் தங்க நகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலேயே அடுத்தடுத்து நடைபெற்ற இந்த வழிப்பறிச் சம்பவங்கள் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
அடுத்தடுத்து தொடர் செயின் பறிப்பு - அதிர்ந்த பெண்கள் ! மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம் !!
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு....!!!
வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அழைப்பு....!!!
புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது ! தட்டி தூக்கிய போலீஸ் !!
போலி போக்சோ வழக்கு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் …..??