| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சிறப்பு புலனாய்வு மற்றும் குற்ற நுண்ணறிவு குழு அமைப்பு....!!!

by admin on | 2026-11-20 07:37 PM

Share:


சிறப்பு புலனாய்வு மற்றும் குற்ற நுண்ணறிவு குழு அமைப்பு....!!!

தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட காவல்துறையில் சிறப்பு புலனாய்வு மற்றும் குற்ற நுண்ணறிவு *COBRA என பெயர் வைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள் :

1.போடி தாலுகா, 2.கடமலைக்குண்டு, 3.தென்கரை, 4.தேனி, 5.க.விலக்கு, 6.பி.சிபட்டி, 7.ஆண்டிபட்டி, 8.உத்தமபாளையம், 9.பெரியகுளம்,ஆகிய ஒன்பது காவல் நிலையங்களில் முன்னோட்ட அடிப்படையிலும் தற்காலிக நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (20.11.26) முதல் (20.03.27) வரை இக்குழுக்கள் செயல்படும், பின்னர் இந்த நடவடிக்கைகளின் செயல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் நடைமுறை தொடரும். இக்குழுவில் நான்கு சக்கர வாகனத்துடன் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் இடம் பெறுவார்கள். 


குழுவின் முக்கிய பணிகள் :

குற்ற நுண்ணறிவு தகவல்களை தீவிரமாக சேகரித்தல்.  செயல்பாட்டில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறிந்து கண்காணித்தல். சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் குற்ற செயல்கள் தொடர்பான நம்பகமான, செயல்படுத்தக்கூடிய தகவல்களை சேகரித்தல். பிடியாணைகளை நிறைவேற்றுதல் (NBWs).ஜாமீன் ரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொடர்தல்.  சட்டத்திற்கு உட்பட்டு பிற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குற்ற தடுப்பு பணிகளை வலுப்படுத்துதல். உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்யப்படும். நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய தகவல்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தகவலை தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் இக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் பணித்திறனை தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்...9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment