| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சட்டவிரோதமாக அணையில் நீரை திறந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை …..!!"

by admin on | 2026-11-20 07:13 PM

Share:


சட்டவிரோதமாக அணையில் நீரை திறந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை …..!!"

சோத்துப்பாறை அணையில் இருந்து சட்டவிரோதமாக நீரை திறந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்...!!!

 தேனி மாவட்டம்  பெரியகுளம்  சோத்துப்பாறை அணையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் உறுதி அளித்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் கீழ் பகுதியில் உள்ள கிளை மதகுப்பகுதியினை முன் அனுமதி இன்றி தமிழக வெற்றிக் கழகத்தினர் தண்ணீர் திறந்து விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.இந்த நிலையில் தேனியில் இன்று நடைபெற்ற தேனி மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சோத்துப்பாறை அணை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் தேனி மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. முன் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அணை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தங்கள் மணுவில் குறிப்பிட்டு இருந்தனர்

இதுகுறித்து அவரிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, சோத்துப்பாறை அணையின்  இருந்து சட்ட விரோதமாக நீரை திறந்து விடப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்ததாகவும், இதன் அடிப்படையில் நீரை திறந்து விட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்ய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அனைத்து அணைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சோத்துப்பாறை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் இதுகுறித்து பேசும்போது, அரசாணை இல்லாமல் முன் அனுமதி இன்றி தண்ணீர் திறந்து விடப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றும், காவல்துறையினர் எவ்வாறு அடையாளம் தெரியாத நபர்கள் என புகார் அளித்து உள்ளது வியப்பாக இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீரினை பயன்படுத்தும் சங்கத்தினர் தெரிவித்தனர்.எந்த ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் அத்துமீறி அணைப்பகுதியில் நுழைந்து மதகினை திறந்து விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் ராமர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த தவெகவினர், பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் விவசாயிகளின் தேவைக்காக வழக்கமாகத் திறக்கப்படும் சிறிய மதகைத் திறந்த நிகழ்வை, அணையின் பிரதான கதவையே திறந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, மக்களிடையே தவறான தகவலைப் பரப்புவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றார்கள்.அந்தச் சிறிய மதகைத் திறப்பதற்கும், அணையின் பிரதான நீர்வெளியேற்றக் கதவைத் திறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் விமர்சனங்கள் செய்வதில் தவறில்லை. ஆனால், உண்மைகளைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்புவது அழகல்ல. மக்களின் நலனும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்புவதைத் தவிர்த்து, ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை வெளியிட வேண்டும் என்று கூறினார்கள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment