| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் ! டி ஐ ஜி அதிரடி !!

by satheesh on | 2026-11-19 09:55 PM

Share:


பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் ! டி ஐ ஜி அதிரடி !!

விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கு: பெண் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு – டி.ஐ.ஜி அதிரடி நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றச்சாட்டுக்குள்ளான அப்போதைய அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீணாவுக்கு கட்டாயப் பணி ஓய்வு வழங்கி நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 10-ஆம் தேதி 17 வயது மாணவி மாயமான நிலையில், அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி மாயமானது குறித்து பெற்றோர் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அப்போதைய நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன், இன்ஸ்பெக்டர் பிரவீணாவை பணியிடை நீக்கம் செய்திருந்தார். பின்னர் குமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த அவருக்கு, தற்போது கட்டாயப் பணி ஓய்வு வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரைப் பதிவு செய்வதில் காட்டிய அலட்சியத்திற்கு காவல்துறையிலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment