| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பழிக்கு பழி கொலையா ? - சிறுவன் உட்பட 11 பேர் அதிரடி கைது !

by satheesh on | 2026-10-08 03:03 PM

Share:


பழிக்கு பழி கொலையா ? - சிறுவன் உட்பட 11 பேர் அதிரடி கைது !

சாணார்பட்டி அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 11 பேர் கைது- எஸ்.பி.அதிரடி நடவடிக்கை :


திண்டுக்கல், நத்தம்ரோடு, நொச்சியோடைபட்டி அருகே சாணார்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பி வந்த பாத்ரூம் முருகன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் என்பவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் ASP.மஞ்சிமா, நகர்DSP.கார்த்திக் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நல்லாம்பட்டியை சேர்ந்த மூர்த்தி(47), குமரேசன்(36), கூவனூத்தை சேர்ந்த பாலு(49), கிழக்கு மரியானாதபுரத்தை சேர்ந்த நவீன்குமார்(20), முத்தழகுபட்டியை சேர்ந்த  லிட்டில்பிரின்ஸ் ராஜ்(26), தேவரூபன் ரெனால்டோ(24),ஆரோக்கியஜெட்லி(27), பாலமரத்துப்பட்டியை சேர்ந்த  ராம்குமார்(33) மற்றும் ராஜசேகர்(31) ராஜக்கபட்டியை சேர்ந்த கதிர்வேல்(36) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment