by satheesh on | 2026-10-09 10:04 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் - மகளைக் காணவில்லை என மாவட்டக் கண்காணிப்பாளரிடம் மாணவியின் தந்தை புகார் !
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் பள்ளி தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 55). ஓட்டல் தொழிலாளியான இவருடைய மகள் ஹசீபா (20),* *மலங்கரையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு சென்ற ஹசீபா மீண்டும் மாலையில் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மகளை செல்போனில் தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பலரிடம் விசாரித்தும் எந்தவொரு தகவலும் இல்லை. உடனே இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாயமான ஹசீபா, அவரது காதலனான மருந்து விற்பனை பிரதிநிதியான அபின் என்பவருடன் தக்கலை போலீசில் தஞ்சம் அடைந்தார்.அப்போது "அபினை " திருமணம் செய்து கொண்டதாக ஹசீபா போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து காதல் ஜோடியின் பெற்றோரை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் காதல் ஜோடி இருவரும் திருமண வயதை எட்டியதால், ஹசீபாவின் விருப்பப்படி காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை திருவிதாங்கோடு பகுதியில் காணாமல் போன கல்லூரி மாணவி ஹசீபா,வேறொரு இளைஞருடன் திருமணம் ஆகி, தக்கலை காவல் நிலையத்திற்கு வந்து பெற்றோர் முன்னிலையில் சம்மதத்துடன் மணமக்களாக அனுப்பி வைக்கப்பட்டதாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்தி பொய்யானது-தன் மகள் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிறது இன்று வரை அவளை நேரில் பார்க்கவில்லை போலீசார் மகளை என்னிடம் மீட்டு தரவில்லை எனவே பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம், பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் போன கல்லூரி மாணவியின் தந்தை ஷாஜகான் உறவினர்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
காதல் ஜோடி போலீசில் தஞ்சம் - மேஜர் ஜோடியை அனுப்பி வைத்த போலீஸ் ! மகளைக் காணவில்லை என தந்தை மாவட்ட எஸ் பி யிடம் புகார் !!
பழிக்கு பழி கொலையா ? - சிறுவன் உட்பட 11 பேர் அதிரடி கைது !
சென்னையில் நடைபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் சந்திப்பு நிகழ்வு ! அரசியலுக்கு அடித்தளமா?
இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோவில் 4 பேர் கைது !
காருக்குள் மசாஜ் - 5 சவரன் மாயம் ! அதிர்ச்சி அடைந்த பில்டிங் காண்ட்ராக்டர் - மதுமிதா மிரட்டியதாக போலீசில் புகார் !!