by satheesh on | 2026-10-17 06:05 PM
திருப்பத்தூர் மாவட்டம் : ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட உம்ராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
வாணியம்பாடி, அக்.6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் பொதுவழி பயன்பாடு தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.bஇதுதொடர்பாக இருதரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.bபுகாரின் பேரில் போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற போது மணிமேகலை இல்லாததால் அவரது மகனான பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, மாணவனை வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாக்ரே, முதற்கட்டமாக சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாக்ரே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இடத்தகராறு தொடர்பான புகாரில், தாய்க்கு பதிலாக அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிழைப்பிற்கு குளத்தில் தாமரைப்பூ பறித்த முதியவர் ! கண்காணித்து 1.5 லட்சம் அபதாரம் விதித்து வனத்துறை அசத்தல் !!
மாணவனை விடுவிக்க லஞ்சம் ! S S I சஸ்பெண்ட் - எஸ் பி அதிரடி !
அப்பாவிடம் பணம் இருக்கிறது - அவர் பார்த்துக் கொள்வார் ! மூன்று பேரை பலி கொண்ட குற்றவாளியின் திமிர் பேச்சு !!
மேகமலை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்.....!!! கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி தகவல்
போதைப் பொருள்கள் கடத்தல் - சொகுசு கார் பறிமுதல் ! இளம் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது !!