| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

நடுவானில் விமானிக்கு கத்திக்குத்து ! உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி !!

by satheesh on | 2026-10-01 02:33 PM

Share:


நடுவானில் விமானிக்கு கத்திக்குத்து ! உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி !!

 நடுவானில் துபாய் விமானத்தில் அதிர்ச்சி! இந்திய விமானி சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு !!


துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நடுவானில் இரு விமானிகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். மோதலின்போது விமானம் சுமார் 14,300 அடி உயரத்தை வேகமாக இழந்தது. ‘7500’ என்ற விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோத தலையீட்டைக் குறிக்கும் அவசரக் குறியீடு அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பியது.bவிமானி அறையில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தலையிட்டு தாக்கியவரை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment