by satheesh on | 2026-10-05 11:12 PM
திண்டுக்கல்லில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிக்க முயற்சி செய்த செய்தியாளர் உட்பட 2 பேர் கைது :
திண்டுக்கல், R.M.காலனி பகுதியில் செயல்பட்டு வரும் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வரும் நபர்களை அடிப்பதாகவும் முறைகேடு நடைபெறுவதாகவும் கூறி இது குறித்து மது போதை மறுவாழ்வு மையத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவேன் என்று திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த அருள்ராஜ் மகன் புஷ்பகிரிதரன்(36), ஞானஸ்டாலின் மகன் மனோஜ்(27) ஆகியோர் மிரட்டி அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறியதாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் ரத்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட புஷ்பகிரிதரன், மனோஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போதை மாத்திரைகள், டானிக் விற்பனை - பட்டாகத்தி டூ வீலர் பறிமுதல்! சிறுவன் உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!!
மது போதை மறுவாழ்வு மையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ! செய்தியாளர் உட்பட 2 பேர் அதிரடி கைது !!
ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துக்களை அபகரித்ததாக போலீசில் புகார் ! போலீஸ் மற்றும் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு !!
நடுவானில் விமானிக்கு கத்திக்குத்து ! உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!!