| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோவில் 4 பேர் கைது !

by satheesh on | 2026-10-07 02:48 PM

Share:


இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோவில் 4 பேர் கைது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெள்ளிச்சந்தை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த மாதம் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அஜன் என்பவர் காதலிப்பதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் விவேக் (32) என்பவரிடம் தெரிவித்த நிலையில், உதவி செய்வதாகக் கூறிய அவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும் பரப்புவிளையைச் சேர்ந்த தினேஷ் (29), நாகர்கோவிலைச் சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) ஆகியோரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அஜன், விவேக், தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.  தலைமறைவாக இருந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment