by satheesh on | 2026-10-05 11:19 PM
திண்டுக்கல்லில் போதை மாத்திரைகள், போதை டானிக், பட்டாகத்திகள், செல்போன்கள், டூவீலர் பறிமுதல் சிறுவன் உட்பட 3 பேர் கைது :
திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வேடப்பட்டி மின் மயானம் எதிரே புதர் பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் திண்டுக்கல், முருகபாவணத்தை சேர்ந்த கணேசன் மகன் பாண்டியராஜன்(19), நெட்டு தெரு பகுதியை சேர்ந்த மதுரைவீரன் மகன் விமல்(19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் அவர்கள் விற்பனைக்காக போதை டானிக்குகள், போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 11 போதை டானிக்குகள், 360 போதை மாத்திரைகள், 3 பட்டாகத்திகள், 2 செல்போன்கள், 1 டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போதை மாத்திரைகள், டானிக் விற்பனை - பட்டாகத்தி டூ வீலர் பறிமுதல்! சிறுவன் உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!!
மது போதை மறுவாழ்வு மையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ! செய்தியாளர் உட்பட 2 பேர் அதிரடி கைது !!
ஆபாச படம் எடுத்து மிரட்டி சொத்துக்களை அபகரித்ததாக போலீசில் புகார் ! போலீஸ் மற்றும் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு !!
நடுவானில் விமானிக்கு கத்திக்குத்து ! உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!!