by satheesh on | 2026-10-29 04:15 PM
கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்த தவெக மகளிரணி மாவட்ட இணை செயலாளர் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் அருகே பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில், கடந்த 23ம்தேதி இரவு தனது வீட்டில் சுரேஷ் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பூதப்பாண்டி போலீசார் சென்று அவரது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்த சுரேஷ், கடந்த 2 மாதங்களுக்கு முன் புத்தேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும் அவரது மனைவி பாரதி (37) அளித்த தகவலின் பேரில் பூதப்பாண்டி போலீசார் பி.என்.எஸ்.எஸ். 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சுரேசின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே மாரடைப்பு மரணம் என இருந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக சுரேஷ் மனைவி பாரதியிடம் நேற்று 3வது நாளாக விசாரணை நடந்தது. சுரேஷ் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால் அவர் இறந்ததாக கூறப்படும் அன்று இரவு, சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மனைவி பாரதியிடம் கேட்ட போது பவர் கட் ஆனதால் கேமராக்கள் இயங்கவில்லை என கூறி உள்ளார். சுரேஷ் வீட்டில் இன்வெர்ட்டர் உள்ளது. பொதுவாக கரண்ட் கட் ஆனால் இன்டர்வெட்டர் ஆன் ஆகி தானாகவே கேமரா இயங்கி இருக்க வேண்டும். ஆனால் கேமரா ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் கேட்ட போது, ஏற்கனவே இன்வெட்டரை ஆஃப் செய்து இருந்தோம் என கூறி உள்ளார். பாரதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க. மகளிரணி இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர விசாரணைக்கு பின் கொடைக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. கணவரை கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சினையோ? இன்று கேள்வி எழும் நிலையில், இக்குளை எதற்காக செய்யப்பட்டது என பல்வேறு சந்தேகங்கள் எழும் நிலையில், பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரவுரையும் ஏற்படுத்தி உள்ளது .
இணை ஆசிரியர் :N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு …..!!! இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்.....!!!!!
கழுத்தை இறுக்கி கணவன் கொடூர கொலை ! த வெ க நிர்வாகி அதிரடி கைது !!
தேனி சிறைச்சாலையில் மதுரை டிஐஜி விசாரணை....!!!!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள்....!!!
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வனத்துறை! இரண்டு தேசிய விருதுகளை பெற்று அசத்தல் !!