| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

காதலியை கொலை செய்து எரித்த கொடூரம் ! கேரள காதலன் அதிரடி கைது !!

by satheesh on | 2026-10-19 05:03 PM

Share:


காதலியை கொலை செய்து எரித்த கொடூரம் ! கேரள காதலன் அதிரடி கைது !!

போடியைச் சேர்ந்த இளம் பெண் கேரளாவில் கொலை : மார்பகத்திலும் அந்தரங்கப் பகுதியிலும் முகத்திலும் பெட்ரோல் ஊற்றப்பட்டதா? இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் :

இடுக்கி: 18 வயது இளம்பெண் நித்யா கொ*லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம்பெண்ணின் காதலனான 19 வயது நிஷாந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடிநாயக்கனூரைச் சேர்ந்த நித்யாவும், ராஜகுமாரி வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்தும் ஒரே பள்ளியில் படித்தபோது நண்பர்களாகப் பழகியுள்ளனர். சமீபகாலமாக நித்யாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக நிஷாந்த் சந்தேகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. திருமணப் பேச்சில் தொடங்கிய சந்திப்பு கொலையில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்துகொள்வது தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறி நித்யாவை பூப்பாறைக்கு நிஷாந்த் வரவழைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். நிஷாந்தின் ஆட்டோவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பின்னர் அவரது முகத்தில் கல்லால் தாக்கி உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோவில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட உடல் : கொலைக்குப் பிறகு இளம்பெண்ணின் உடலை ஆட்டோவில் மறைத்து எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாம்பள அணைப் பகுதியிலுள்ள பனங்குட்டி சோதனைச் சாவடி அருகே உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நீண்டபாறை பகுதியில் பாம்பள அணைக்கு அருகே எரிந்த நிலையில் கிடந்த உ*டலை புதன்கிழமை கரிமணல் போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுமார் 48 மணி நேரத்திற்குள் நிஷாந்த் பிடிபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதா? போலீசார் விசாரணை! இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உடற்கூராய்வு மேற்கொண்ட பிறகே கொலை தொடர்பான கூடுதல் விவரங்களை உறுதிப்படுத்த முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நித்யாவைக் காணவில்லை என்று அவர் காணாமல் போன நாளில் தமிழக போலீசாரிடம் புகார் அளித்திருந்ததாகவும், ஆனால் விசாரணை தீவிரமாக நடைபெறவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நித்யாவுக்கும் நிஷாந்துக்கும் இடையிலான நட்பு குறித்து குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 18 வயது இளம்பெண்ணின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் முழுமையான உண்மைகள் போலீஸ் விசாரணை மற்றும் உடற்கூராய்வு அறிக்கைக்குப் பிறகே உறுதியாகத் தெரியவரும்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment