by satheesh on | 2026-11-02 03:42 PM
அவன் என்னோட காதலன் அப்படித்தான் அவன் கூட பேசுவேன்"- காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு அறிவுரை சொல்லியும் கேட்காததால் கழுத்தை திருகி கொன்ற தந்தை..!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி. பரங்கினி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி. லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் 16 வயதுடைய மூத்த மகளும், 14 வயதுடைய இளைய மகளும் உள்ளனர். இளைய மகளான விகாஷினி, ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் அவருக்குக் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, ராணிப்பேட்டையில் தங்கிப் படிப்பது சரியாக இருக்காது எனக் கருதிய குடும்பத்தினர், விகாஷினியை மீண்டும் சொந்த ஊரான வி. பரங்கினிக்கு அழைத்து வந்துள்ளனர். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அவர் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். படிக்காமல் காதலில் திளைத்துக் கொண்டிருந்த தனது மகளிடம், படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என்றும், முதலில் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் பெற்றோர் விகாஷினிக்கு தக்க அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால், பெற்றோரின் அறிவுரையை ஏற்காமல், செல்போனில் காதலனுடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு மாணவியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், விகாஷினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது தந்தை சிவசாஸ்திரி, மாணவியின் செல்போனைப் பார்த்தபோது, அவர் தொடர்ந்து காதலனுடன் பேசியது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி, தனது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.bபின்னர், உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்கு வந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிலிருந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இச் சம்பவம் குறித்து வானூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், மாணவியின் தந்தை சிவசாஸ்திரியைக் கைது செய்தனர். மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வானூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கும் வயதில் பெண் பிள்ளைகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். காதலில் வீழ்ந்தால் அதனால் படிப்பு தடைபடும். வாழ்க்கை வீணாகும். அதன் பின் காதலன் தனது ஆசை முடிந்தவுடன் விட்டுச் சென்று விடுவான். பெண் பிள்ளைகள் தாம் வாழ்க்கையை தொலைத்து விட்டு இருக்க வேண்டும்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!
கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!