| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!

by admin on | 2026-10-30 07:19 PM

Share:


கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!

*கேள்வி-பதில்*


*-- ஆர். வி. ஆர்*


[முந்தைய கேள்வி-பதில் பகுதிகளை இங்கு தட்டிப் படிக்கலாம் --> https://rvr-india.blogspot.com]


*1. கேள்வி:* தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவைக் கோரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, "தேர்தல் கமிஷன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவரின் ராஜினாமா அவசியம்" என்று தெரிவிக்கிறது. அந்தக் கோரிக்கைக்கு இந்தக் காரணம் வலுவானதா?

*பதில்:* ஒரு சின்ன சந்தேகம் தெளிந்தால் இதற்கான பதில் எளிது. 

"ஐயா, கரப்பான்பூச்சிகளே! நீங்கள் தான் எங்களின் ஒருமித்த குரல். நாங்களே தேர்தெடுத்த அரசாங்கத்தை நீங்கள் என்ன விமர்சித்தாலும், உங்கள் கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும், நீங்கள் போ என்றால் ஒரு அரசு அதிகாரி பதவி விலகிப் போகவேண்டும், அப்போதுதான் அந்தப் பதவியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கும். எங்கள் சார்பாக இதை நீங்களே அறிவித்துவிடுங்கள்" என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எப்போது பொதுமக்கள் அதிகாரம் கொடுத்தார்கள்?

                              *****

*2. கேள்வி:* "கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றிக் கலக்க விடுவது தான் நுரை பெருக்கெடுக்கக் காரணம் என்பதில்லை; அந்த ஆற்றில் நுரை ஏற்பட சோப்பு ஷாம்பு பயன்பாடுதான் காரணம்" என்று மாநில அமைச்சர் ராஜிவ் விளக்கம் சொல்லி இருக்கிறாரே?

*பதில்:* தமிழகத்தின் பிற பகுதிகளில், வீடுகளின் குளியலறைகளிலிருந்து வெளியேறி சாக்கடைகளில் கலக்கும் நீரில் இப்படி நுரை பொங்குவதில்லையே, அந்தப் பகுதி மக்கள் சோப்புப் போட்டு குளிப்பதில்லையா, ஷாம்புவும் உபயோகிப்பதில்லையா, அங்குள்ள கடைகளில் சோப்பு ஷாம்பு விற்பனை ஆவதில்லையா?

                              ****

*3. கேள்வி:* 100 கோடி ரூபாய் கலெக்ஷன் வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவரை இரண்டு முறை அடுத்தடுத்து சிறையில் சந்தித்துப் பேசி இருக்கிறாரே?

*பதில்:* போலீஸ் தன்னைக் கைது செய்யப்போவதை எதிர்பார்த்து, பொதுவெளியில் தனது பெயர் கெடப் போகிறதே என்று அன்பில் மகேஷ் பதட்டம் கொண்டிருப்பார். அவர் கைதாகி விசாரணைக்கு உள்ளாகும் போது, திமுக தலைவர் உதயநிதி மேலும் அதிகமாகப் பதட்டம் கொள்கிறார் - கைதான அமைச்சரை வேகவேகமாக இரண்டுமுறை சந்திக்கிறார். உதயநிதியின் கூடுதலான பதட்டமும் இயற்கையானது -  ஏன் அப்படி என்று விவரமானவர்களுக்குப் புரியும்.

                            *****

*4. கேள்வி:* அக்டோபர் 31ம் தேதி 'இண்டி' கூட்டணிக் கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி, தலைமைத் தேர்தல் கமிஷனரைப் பொதுவெளியில் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஒரு பாவனையாக நிறைவேற்றப் போகிறார்களாமே?

*பதில்:* வீட்டிலுள்ள சிறு குழந்தைகள் சமையல் செய்ய முடியாது. சமையல் செய்ய அவர்களுக்கு அதிகாரமும் இல்லை. இருந்தாலும் அவர்கள் சொப்புகளை வைத்து பாவனையாகச் சமைத்து, அவர்களுக்குள்ளேயே பாவனையாகப் பரிமாறி உண்டு மகிழ்வார்கள். பெரியவர்கள் பார்த்து ரசிக்கலாம் - அதுபற்றிக் குழந்தைகளுக்குக் கவலை இருக்காது. 

சில அரசியல் குழந்தைகள் ஒன்றுகூடி பாவனையாகத் தலைமைத் தேர்தல் கமிஷனரைப் பதவி நீக்கம் செய்து சந்தோஷப்பட நினைக்கின்றன. நாம் பரிகசிக்கலாம். இந்தக் குழந்தைகளும் கவலைப்பட மாட்டார்கள்.                              *****

*5. கேள்வி:* "நானும் ரஜினியும் பேசியபோது, 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் என்னிடம் வருத்தப்பட்டார். நீங்களாவது ஜெயித்திருக்கலாம். எனக்கு ரொம்ப கஷ்டம். ரொம்ப வருத்தம்" என்று ரஜினிகாந்த் தன்னிடம் சொன்னதாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொல்லி இருக்கிறாரே?

*பதில்:*  நமக்குத் தெரிந்தவருக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டிருந்தால், நாகரிகத்திற்காக நாம் அவரிடம் வருத்தம் தெரிவிக்கலாம். அந்த இழப்பு ஒரு தேர்தல் தோல்வியாக இருந்தால், ஜெயித்தவர் தோற்று தோற்றவர் ஜெயித்திருக்க வேண்டும் என்று நாம் விரும்புவதாக அர்த்தமில்லை.

இன்னொன்று: சீமான் சினிமா டைரக்டராக இருந்தவர். புதுப்புது காட்சிகளைக் கற்பனை செய்யத் தெரிந்தவர். ரஜினிகாந்தும் நல்ல நடிகர். அவராகவே ஒரு டைரக்டரின் குறிப்பறிந்து நடிக்கத் தெரிந்தவர். இரண்டில் ஒன்று - நமக்கென்ன தெரியும்?

                               

R. Veera Raghavan

Advocate, Chennai

Email: veera.rvr@gmail.com

Blog: https://rvr-india.blogspot.com


தி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் .  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment